பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பேசிக்Aொண்டுதான் இருக்கின்றன. பிரச்சினைகள் பேசுகின்றன என்று நான் கேட்கத் தொடங்கி விட்டால், பிரமன் கூட பிறப்புத் தொழிலை மறந்து விடுவான். நிறுத்தியும் விடுவான். * நாம் பிரச்சினைகளின் மேலே மிதக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளுக்குள் அமுங்கிப் போய்விட்டால், அப்புறம் நம் கதி அதோ கதிதான். எனக்கு உன்னைப் போல் வசதியாக வீடும் படுக்கையும் வந்தால்தான் உறங்குவேன் என்று இருந்தால், ஒருநாள்கூட என்னால் உறங்க முடியாது. காலம் பூராவும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிரச்சினைகள் பேசட்டும். தாக் கட்டும் போராடட்டும் நாம் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டால் தூங்க மட்டுமல்ல இந்த உலகத்தில் பெரிய மனிதர்களாகக் கூட உயர்ந்து விடலாம் என்று சொல்லியபடி சென்றான் குமரன். வடிவேலனுக்கு அவன் சொன்னது புரியவில்லை 'ம்' என்று உதட்டை பிதுக்கியபடி உள்ளே சென்றுவிட்டான். இப்பொழுதுதான் தூக்கம் வருவது போலிருந்தது. வாழ்க்கையில் முன்னேறி வந்த ஒவ்வொருவருட வசதியான குடும் பத்தில் பிறந்து, வசதியா வாழ்ந்தவர்களல்லர். இல்லாமையும் இயலாமையு. அவர்களது தலையாய பிரச்சினைகளாகவே இருந்தன