பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

மிகவும் தொல்லைப்படவேண்டியிருக்கும். அன்பிருக்கும் போது வாழ்க்கை எளிதாகிறது” என்ற தங்கப்பாவின் மொழிக்கேற்ற பேரெண்ணங்கள் மலரும் பயன் மரமாக ஓங்கி உயர்ந்தவர் மார்க்சு.

மார்க்சின் எண்ணத் தாக்கம் நானிலம் எங்கும் பரவியதென்றாலும் சோவியத்து நாட்டில் புதியதோர் உலகைப் படைத்தது. பொது உடைமைக் கொள்கையைத் திசை எட்டும் பரப்பியது. மானுடத்திற்குப் புதிய வாழ்வும், புதிய நோக்கும் போக்கும் கிட்டின. எண்ணத் தெரிந்த மாந்தர்க்குப் புத்தம் புதிய சிந்தனை மலர்களில் தேனருவி கொட்டியது. மாந்த வாழ்வை நலப்படுத்தும் நறுமணம் முட்டியது. அவற்றின் தொகுப்பே நுண்மதியாளரின் பொன்மொழிகள் (words of the wise) என்ற நூல். 20 ஆண்டுகளுக்கு முன் நான் புது நூற்றாண்டுப் புத்தகக் கடையில் (NCBH) பணிபுரிந்த போது கிடைத்தது.

அந்நூலால் மன வானின் எண்ண வைகறையில் வண்ண வண்ணக் கோலம் கொண்டு மகிழ்ந்தெழும் ஞாயிற்றைப் போல் அறிவிலே தெளிவும் ஆற்றலிலே புதிய வலிமையும் வாழ்வு நோக்கத்தில் புதிய பொலிவையும் பெற்றேன். முன்னமே பெற்றிருந்த பொது உடைமைச் சிந்தனைகளுக்கு மேலும் எண்ணற்ற புதிய எல்லைகள் தோன்றின. l

இந் நூலின் மூலத்தைப் படித்தத் தோழர் ம. இலெ. தங்கப்பா

“இதைத் தமிழ்ப் படுத்துங்களேன்” என்றார். அவர் கூறியதற்கு

முன்னரே பொதுவுடைமை நாட்டைப் படைக்க முடியும் என்று

செயல்படுத்திய உயர்தனிச் செம்மல் வி.இ.இலெனின் மொழிகளை

மட்டும் சனசக்தி வார ஏட்டில் வெளியிட்டேன். புதுக்கவிதைப்

பல்லுருவிப் பூண்டுகள் முளைக்கத் தொடங்கிய காலம் அது. கன்வே அதனை - என் பா வடிவத்தைப் புறக்கணித்தனர்.

8