பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் வாழ்வும்

உண்மையும் கதையும்

  • வாழ்வின் உண்மைத் தண்மையினை வெளிப்படுவதில் உள்ள இலக்கியத்தின் முதன்மையான நோக்கத்தைக் காணும் போது, அதில் ஒரு தனிப்பண்பு இருக்க வேண்டுமென நாம் விரும்பு கிறோம்; அது இல்லாமல் இலக்கியம் எந்தவிதத் திறமைகளும் பெற்றதாக, அதாவது, உண்மை நிறைந்ததாக இருக்க இயலாது. நிகலாய் தோப்ரோலியுபோவ்
  • ஒரு கலைப் படைப்பில் உண்மையென்பது ஒர் இன்றியமையாத முலக் கூறாக உள்ள போதும், அது அதன் திறமையாக இருப்ப தில்லை. ஆசிரியரின் பார்வையின் அகன்ற மனப்பாண்மை, அவரது முறையாகப் புரிந்து கொள்ளும் தன்மை, அவர் எழுதும் செய்தி களைப் பற்றி உயிர்த்தன்மையுடன் வரைவது ஆகியவற்றைக் கொண்டே ஒரு கலைப் படைப்பின் திறமையை நாம் அளவிடு கிறோம். நிகலாய் தோப்ரோலியுபோவ்
  • வரலாற்று வகையான கலைப் படைப்புகளில் உண்மை என்பது அடிப்படையாக இருக்க வேண்டும், கதைகளில், நிகழ்வுகள் கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள இடங்களில், அது மெய் யியல் உண்மையால் மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது நடைபெற்றுக் கொள்ளும் நிகழ்வுகளின் நடைமுறைகளை ஒட்டியதாகவும் அதே நேரத்தில் ஒரு முறைமையான அளவில்

நடைபெறக் கூடியதாகவும் இருப்பதாகும்.

நிகலாய் தோப்ரோலியுபோவ்

  • உண்மையிலேயே பெரிய கலையெண்பது பொய்மைகளால் துன்புறுவதில்லை. கான்ஸ்டாண்டின் ஸ்டேனிஸ்லேவ்ஸ்கி

132