பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • இலக்கியம் அதனுடைய மேன்மைக்கு, அதன் உண்மை நிறைந்த தன்மைக்குக் கடமைப்பட்டுள்ளது. மாக்சிம் கோர்கி
  • உண்மை எளிமையை விரும்பும்போது, பொய்மை குழப்பத்தையே விரும்புகிறது. இது இலக்கிய வரலாற்றினால் மிகத் தெளிவாக

மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மாக்சிம் கோர்கி

  • ஒர் எழுத்தாளனாக இருக்க முயற்சி செய்பவர், எப்போதும்

முற்றிலும் உண்மையானவனாக இருக்கவேண்டும்.

மாக்சிம் கோர்கி

  • இலக்கியப் பாசறையில் உள்ள மிகவும் இன்றியமையாத கருவி களில் ஒன்று கற்பனை என்பதாகும்; அது கற்பனைக் காட்சியை உருவாக்குகிறது. மாக்சிம் கோர்கி
  • கற்பனை இண்றி கலைத்தன்மை எண்பது இயலாததே ஆகும்.

மாக்சிம் கோர்கி

  • கலை, கண்டுபிடிப்புகளின் மீது வாழ்ந்து வளர்கிறது; அறிவியல் அதனை நடைமுறையில் அமைக்கிறது. மாக்சிம் கோர்கி
  • துளிகை, சிற்பியின் உளி, சொல் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை யினைக் கலை வெளிப்படுத்துவதில், கண்டுபிடிப்பு என்பது எந்த வெளிப்பாட்டினை மேம்படுத்தி, அதனை மிகவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக ஆக்கி, அதனுடைய பொருளை ஆழமுள்ள தாக்கி, அது சமூகப்படி உண்மையானதும் தவிர்க்க இயலாததும் எனக் காட்டுமேயானால், அது மிகப் பொருத்தமானதும் பயண் நிறைந்ததுமாகும். மாக்சிம் கோர்கி
  • அறிவியலுக்கும், கதைக்குமிடையே பல பொதுவாக உள்ளன. இரண்டிலுமே முதன்மையான பணியெண்பது உற்று நோக்குதல், ஒப்பிடுதல், ஆய்வு செய்வது என்பவையேயாகும். அறிவிய லாளரைப் போலவே எழுத்தாளரும் கற்பனையும், ஊகங்களின்

134