பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • கலையின் அடிப்படையிலான இன்றியமையாமை எண்பது, மனிதனுக்கு ஆர்வம் அளிக்கும் அனைத்தையும் மறுபடியும் உரு வாக்குவது என்பதேயாகும். அடிக்கடி, குறிப்பாகக் கவிதையில், வாழ்வினையும் அதன் உண்மைத் தண்மை பற்றிய மதிப்பினை யும் விரிவாக எடுத்துக் கூறுவது என்பதும் முன்னணியில் இருப்பதாகும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி * அந்தக் காலத்தின் கட்டாயத் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் இன்றி யமையாத, வலிமையான கருத்துகளின் செல்வாக்கின் அடிப் படையில் வடிவமைக்கப்பட்ட இலக்கிய ஆற்றல்களினால் மட்டுமே ஒளிமயமான நிலைக்கு உயர இயலும்,

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி * இலக்கியம் எப்போதுமே நாடுகளின் முன்னேற்றத்தின் மீது ஒரு செல்வாக்கைப் பயண்படுத்துகின்றன எண்பதுடன் வரலாற்றுப் பயணத்தில் அதிக அல்லது குறைந்த அளவில் இன்றியமை யாத ஒரு பகுதியாகச் செயலாற்றவும் செய்கிறது.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி * கவிதையும் கலையும் வெளிப்பாடு பற்றி மட்டுமல்லாமல் பட்டறி

வாற்றலின் ஒரு தனிப்பட்ட வடிவமாக இருப்பவையாகும்.

ஜானிஸ் ரெய்ன்ஸ் * கவிதையும், கலைகளும் அறிவியலையும் போலவே, பொதுவாக வாழ்க்கைக்கேற்றபடி இயற்றப்பட்டதாகும்; ஆனால் வாழ்க்கை யோ கவிதைக்கேற்றபடி இருப்பதில்லை. வாழ்க்கைக்கு மாறுபட்ட தாக கவிதையில் உள்ள அனைத்துமே, அதாவது, அது வாழ்க்கை யிலிருந்து நேரடியாகவும் இயல்பாகவும் வழிவதாக இல்லாமல் இருப்பின், அது பொருளற்றதும் அழகற்றதுமே ஆகும்.

நிகலாய் தோப்ரோலியுபோவ் * ஒரு காலத்தின் அல்லது மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த அளவுக்கு ஒர் எழுத்தாளரோ ஒரு கலைப்படைப்போ வெளிப்படுத்துகிறது என்பதே அவர்களின் திறமையனை அளவிடுவதாகும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நிகலாய் தோப்ரோலியுபோவ்

143