பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • நேற்றையத் தவறுகளைப் பகுத்தாய்வதன் முலம், இன்றும் நாளையும் தவறுகளைத் தவிர்க்க நாம் கற்றுக் கொள்கிறோம். வி.இ இலெனின்
  • நமது தவறுகளை ஒப்புக் கொள்ள நாம் அஞ்சவில்லையெனில், அவற்றை நேர் செய்யத் தொடர்ந்த முயற்சிகளை மேற்கொள்ள நாம் அஞ்சவில்லையெனில், நாம் உறுதியாக மிக உயர்ந்த நிலையை அடைவோம். வி.இ. இலெனின்
  • ஒரு சிறு தவறு தொடர்ந்து செய்யப்பட்டால், அதனை மெய்மைப் பருத்த ஆழ்ந்த முயற்சி மேற் கொள்ளப்பட்டால், அதனுடைய மெய்யியல் முடிவுக்கு அது எருத்துச்செல்லப்பட்டால், எப்போதுமே

அது அஞ்சத்தக்க அளவை அடைந்துவிட இயலும்.

வி.இ. இலெனின்

  • மனிதன் தவறு செய்யலாம். ஒரு தவறு என்பது ஒரு பொய் ஆகாது. பல தவறுகளால் கூட.ஒரு நல்ல நோக்கத்தை இடிந்து போகச் செய்ய இயலாது. அனைத்தும் அதன் மீது கட்டப்பட்ட கருத்து மட்டு மாவது கறைபடாமல் நிலைத்து நிற்க முடியும். உனது முதல் முயற்சிதோல்வியுற்றாலும், உனது இரண்டாவது

முயற்சி வெற்றி பெறவே செய்யும்.

பியோம் தோஸ்தோயெவ்ஸ்கி

  • ஒரு தவற்றை எப்போதுமே செய்யாமல் இருப்பது என்பது ஒரு

பொருட்டில்லை; ஆனால் தவறுகளை ஒப்புக் கொண்டு, உனது

மனச் சான்றின்படி துணிவுடனும் பெருந்தன்மையுடன் பின்பற்றி நடந்து செல்வது என்பதே இன்றியமையாதது.

விசாரியோன் பெலன்ஸ்கி
  • தனிப்பட்டவண் தனது தவறுகளையும், வலிமைக் குறைவு களையும் மிகுந்த துணிவுடன் காண்பானேயானால், அந்த அளவுக்கு அவன் வலிவுடையவனாவதுடன், அவனது அறக்

கோட்பாடுகளும் உயர்ந்தவையாகவும் இருக்கும்.

விசாரியோன் பெலன்ஸ்கி

192