பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • மக்கள் நீண்ட நெருங்காலமாக இவ் உலகை ஒரு புயல் நிறைந்த தொரு பேரழியாகவே கருதி வந்திருந்த போதும், அதனில் ஒரு திசை காட்டியுடன் பயணம் செப்பவனுக்கு அது ஒரு பொருட்டே யில்லை. நிகலாய் கராம்சின்
  • வாழ்க்கையில்உனக்கென ஒரு குறிக்கோளை,நீபடைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், உறுதியாக, உண்னால் அடைய இயன்ற ஒன்றைப் படைத்துக் கொள்ளத் தேவையான நல்லறிவை நீ பெற்றிருப்பாயாக! நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி
  • மனிதர்களிலேயே கீழானவன் எந்த எதிர்பார்ப்புகளையும் பெற்றி ராதவனேயாவான். அபாய் குனாள்பயேவ்
  • ஆர்வமின்றேல் எந்த நோக்கமும் இல்லை, நோக்கமின்றேல் எந்த செயல்பாடுமில்லை,செயல்பாடின்றேல்வாழ்க்கைஎன்பதே இல்லை. ஆர்வம், நோக்கம், செயல்பாடு ஆகியவை சமூக வாழ்க்கை

யிலேயே தங்களது தோற்றத்தைப் பெற்றுள்ளன.

விசாரியோன் பெலண்ஸ்கி

  • ஆக்க நிலையிலான குறிக்கோள்களை உனக்காகப் படைத்துக் கொள். ஏதோவொன்றினை எதிர்த்து மட்டுமல்லாது, நண்மை யான ஏதோவொன்றிற்கு ஆதரவாகவும் நாம்போரிட வேண்டும். இ.ஐ. மார்ட்சினோவ்ஸ்கி
  • ஒரு பாதை குறிக்கோளுக்கு அழைத்துச் செல்லுமேயானால், அதன் நீட்சி ஒரு பொருட்டேயன்று. இ.ஐ. மார்ட்சினோவ்ஸ்கி
  • ஒரு விருப்பமான எதிர்பார்ப்பு, ஒரு துய்மையான தோற்றத்தி லிருந்து உருவாகுமேயானால், அது தனது குறிக்கோளில் முழுமை யான வெற்றியடையாமல் குறைவுபட்டதாக இருந்தபோதும், அது மாபெரும் நண்மைகளை விளைவிக்கவே செய்யும்.

இவான் துர்கனேவ்

  • தனக்கென ஒரு பெரும் குறிக்கோளைப் படைத்துக் கொண்டவர்,

195