பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • புறக்கணிப்பு என்பது உள்ளுயிரின் ஒர் இயக்கமற்ற தண்மையும்,

உரிய காலத்திற்கு முன்னதாக ஏற்படும் இறப்பும் ஆகும்.

ஆண்டன் செகாவ்

  • புறக்கணிப்பைப் பற்றி மிக்க விழிப்புணர்வுடன் இரு. ஏனெனில்

அது உள்ளுயிர்க்கு அழிவை ஏற்படுத்துவது ஆகும்.

மாக்சிம் கோர்கி

  • புறக்கணிப்பு என்பது வலிமை படைத்தவர்களுக்கு ஆள்பவர்க்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகும். வி.இ. இலெனின்
  • ஒருவர் விரும்ப இயன்றது போல, வெறுக்க இயலாதவாறு வாழ்க்கை தீயகுணம் மிகுந்த கலைநுணுக்கம் நிறைந்ததாக உள்ளது. மாக்சிம் கோர்கி
  • தீயவற்றில் ஈடுபடுவது என்பது.நற்தன்மையைப் பற்றிய புறக்

கணிப்பின் மிக நெருக்கமாக அழைத்துச் செல்வதாகும்.

நிகலாய் லெஸ்கோவ்

ஆர்வமும், ஊக்கமும்

  • பொதுவுடைமைக் கருத்துகளை உண்னுள் விதைத்துக் கொள்ள நீ ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். மைக்கேல் கால்னின்
  • ஆர்வமின்றி வரலாற்றில் எந்தப் பெரிய முன்னேற்றமும் எட்டப் பட்டதில்லை. அது ஒழுக்க வலிமையைப் பன்மடங்காக்குவதுடன், மனிதத் திறன்களைக் கூர்மைப்படுத்துவதால், ஒரு பெரும் முன் னேற்ற ஆற்றலாகத் திகழும் உரிமையினை அது பெற்றுள்ளது.

ஜி.வி.பிளக்னோவ் * அமைக்கப்பட்டுக்கொண்ட குறிக்கோளின்பால் கொண்ட ஆற்றலே, ஊக்கம் என்பது. பி.ஏ.பவலெண்கோ

197