பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் sy த. கோவேந்தன்

அவற்றின் சரியான பெயரிட்டுத்தெளிவாக அழைக்கவும் தயக்கம் காட்டாது. வி.இ. இலெனின்

  • ஒவ்வோர் உயிர்ப்புள்ள, விரைவு நிறைந்த கட்சிக்கும் தன்னைத் தானே திறனாய்வது என்பது அடிப்படையில் இன்றியமையா தது. ஆக்க நிலையான திறனாய்வை வெறுத்து ஒதுக்கி எல்லாம் நண்மைக்கேயென நிறைவடைவதைவிடச் சோர்வளிப்பது வேறெதுவும் இல்லை. வி.இ. இலெனின்
  • வருத்தமளிக்கும் கசப்பான உணர்மையை நேரடியாகப் பேச அஞ்சுபவர்களாக நாமில்லையெனில், நமது துன்பங்கள், இடை யூறுகள் அனைத்தையும் கடக்க நாம் தவறாமல், உறுதியாகக் கற்றறிந்து கொள்ளவே செய்வோம். வி.இ இலெனின்
  • தற்போதுள்ள கேடுகளை முடி மறைக்காதே. ஆனால் அதற்குக் கட்சியின் கவனத்தை அழைத்து வந்து, அந்தக் கேட்டினை நீக்கு வதற்காக பணியாற்றுமாறு அனைத்துக் கட்சி உறுப்பினர் களையும் கேட்டுக் கொள். வி.இ. இலெனின்
  • தவறுகளால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. அது தீமை நிறைந்ததாகும். வி.இ. இலெனின்
  • க்சப்பான, அழகுபடுத்தப்படாத உண்மையை அதன் முகத்திற் கெதிரே துணிவுடன் நாம் காண வேண்டும். வி.இ.இலெனின்
  • ஒரு கேட்டினை மிக உறுதியுடன் போரிட்டு அழிக்க, அதனை அச்ச

மின்றி ஒப்புக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வி.இ. இலெனின்

விள்ம்பரமென்பது ஒரு கத்தியைப் போன்றது; ஏனெனில்

அது ஏற்படுத்திய புண்களை அதுவே ஆற்றுகிறது.

வி.இ. இலெனின்

199