பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • பொய்மையை வளர்க்கும் சூழ்நிலைகளைப் புறக்கணித்துவிட்டு உண்மையை வேண்டுவதென்பது, நன்கு அமைக்கப்படாத தொரு சாலையில் மழை கொட்டும்போது சேறு இருக்கக்கூடாது என்று வேண்டுவது போன்றதாகும். திமிட்ரி பிசரேவ்
  • தவறுகள் பற்றிய திறனாய்வு, கட்டுமானம் என்பதனால் ஆளப்பரு வது. நமக்கு இப்போது தேவைப்பருவதெல்லாம் நாம் இன்னமும் செங்குத்தாக ஏறி உயரே செல்ல வேண்டுமென்பதுதான். நமது கட்டுமானப்பணிகள் அனைத்து வகையான எதிர்மறைச்சிந்தனை, செயல்களால் உருமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது

எண்பதாலேயே நாம் குறை கூறுகிறோம்.

மைக்கேல் கால்னின்

  • நீ அறிந்துள்ளது போல், நமது நாட்டில் தவறுகளைப் பற்றித் திறனாய்ந்து குறை கூறுவது என்பது கட்டுப்பாடற்ற உரிமை பெற்றதாக இருப்பதுடன் இன்றியமையாத தேவையாகவும் இருக்கிறது. உறுதியாக அது உண்மை என்பதின் அடித்தளத்தின் மீதே அமைந்திருக்க வேண்டும். மைக்கேல் கால்னின்
  • தீயவை அனைத்தும் போரிட்டு அழிக்கப்பட வேண்டும். அவை பொறுத்துக் கொள்ள இயலாதவை. அவற்றுடன் உடன்பாடு

செய்து கொள்வதென்பது ஒழுக்கக் கேடாகும்,

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • பல ஆண்டு காலமாக வேலை செய்து கொண்டே இருந்ததால் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கிக் கொள்வது எண்பது, துன்பங் களைத் தாங்கிக் கொள்வதிலேயே குறிப்பிடத் தகுந்த ஒரு வகை யாகும். தவறுகளைப் பற்றி அறிவார்ந்த முறையில் ஊளையிரு வது ஏதுவும் அதற்குத் தேவையில்லை. முழக்கங்கள் செய் வதும் சொற்களை வீசுவதும் மதிப்பற்றவை. பேசுவதைவிடச் செயலாற்றுவதே மேலானது. வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • மனிதன் உண்மையிலேயே எதனைப் போன்று இருக்கிறான் என்று அவனுக்கு நீ காட்டும்போது, அவன் தான் நன்றாக இருப்பதாக உணர்கிறான். ஆண்டன் செகாவ்

202