பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • தவறுகளைக் குறிப்பிடுவதனால் சிறிதளவே பயன் இருக்கும்; ஒரு தகுதிபடைத்த மனிதன் அதற்குப்பதிலாக, மேலான ஏதோ ஒன்றினை அளிக்க வேண்டும். மைக்கேல் லோமனசோவ்
  • மற்றவர்கள் உண்னிடம் கருமையாக இருப்பதை நீ விரும்பவில்லை

யெனில், நீ உன்னுடனேயே கடுமையாக இரு.

இலியோனிட் லியோனோவ்

  • மற்றவர்களின் தவறுகளை மன்னிக்க இளமையிலேயே கற்றுக் கொள்; ஆனால் உனது தவறுகளை எப்போதுமே மண்ணிக்காதே. ஏ.வி. சுவரோவ்
  • சில மக்களுக்கு உண்மையின் ஒவ்வொரு சொல்லுமே, அது மிகைப்

பருத்தப்படாததாக உள்ளபோது, கருமையானதாக ஒலிக்கும்.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

கோட்பாடு, குறிக்கோள்

  • ஒரு கோட்பாட்டுடன் வடிமைக்கப்பட்ட நிறைந்த நோக்கங்கள் கொண்ட வாழ்க்கை, பொது நலன் எண்பதுடன் பிணைக்கப்பட் டிருப்பின், இவ் உலகில் மிகச் சிறந்ததும், ஆர்வம் மிக்கதுவுமான வாழ்க்கையாக அது இருக்கும். மைக்கேல் கால்னின்
  • வாழ்க்கையில் எந்த குறிக்கோளையோ, நோக்கத்தையோ கொண்டி ராதவன் பரிவுடன் நோக்கும் காட்சிக்கு உரியவன் ஆவான்.

இவான் துர்கனேவ்

  • ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் தான் நேசிப்பதற்கு ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். தான் நம்பிக்கை கொள்ள இயன்ற ஏதோ ஒன்றினைப் பெற்றிருக்கவேண்டும். அவனது வாழ்க்கைக்குப் பொருள் அளிக்கக்கூடிய ஏதோ ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். லினாய்ட் ஆன்ட்ரயேவ்

204