பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் qof த. கோவேந்தன்

  • மனிதன் ஒரு குறிக்கோளை, நோக்கத்தைப்பெற்று இருக்கவேண்டும்.

ஆனால் இயற்கையுடன் ஒட்டியதான, இயல்புக்கு ஏற்றதான

ஒரு மனிதநேயம் கொண்ட நோக்கமாக இருக்க வேண்டுமே யன்றி, இயல்புக்கு மாறுபட்ட ஒன்றாக இருக்கக் கூடாது.

- வி.இ. இலெனின்

  • கருத்துகள் மக்களை ஆட்கொண்டுவிரும்போது, அவை ஒரு ஆற்ற லாக ஆகிவிடுகின்றன. வி.இ இலெனின்
  • பெரும்பாலும் மக்களின் கோட்பாடுகள், அவர்களது நாக்குத் தோலை விட அதிகமான அளவில் அவர்களில் ஆழமாகப் பதிந்திருப்ப தில்லை. வி.இ இலெனின்
  • ஒரு குறிக்கோள், நோக்கம் என்பது வழிகாட்டும் ஒரு துருவ விண் மீனாகும். அது இல்லாமல், மேற்கொள்ளப்பட ஒரு சரியாக அமைக் கப்பட்ட பாதை இருக்க இயலாது. அத்தகைய பாதையின்றி வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத் தகுதியுள்ளதாக இருக்க இயலாது. இலியோ தோல்கதாய்
  • முன்னம் இருந்த நோக்கத்தைவிட உயர்ந்த ஒன்று மனித இனத்தின் முன் படைக்கப்பட்ட அந்தக்கணமே, அதற்கு முன்பிருந்த அனைத்து நோக்கங்களும் செங்கதிர்க்கு முண் விண்மீன்களைப் போல தங்களது ஒளியையும், கவர்ச்சியையும் இழந்துவிடுகின்றன. மக்களும் செங்கதிரைக் காணத் தவற இயலாதது போன்றே அத்தகைய உயர்ந்த நோக்கத்தை ஏற்றுக் கொள்ளத் கவற. இயலாது. இலியோ தோல்கதாய்
  • எந்த ஒரு நோக்கத்தையும் பெற்றிராமல் இருப்பது என்பதும் ஏதோ ஒரு வகையில் முன்னேற்றம் பெற வேண்டுமென்ற தெளி வற்ற ஒரு ஆவல்கூட இல்லாமல் இருப்பது என்பதும், ஒரு முன் னேற்றமான உலகத்தை எப்போதுமே உருவாக்க இடமளிக்காது. மாக்சிம் கோர்கி

205