பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டமும், தன்னுரிமையும்

சிட்டம்

  • சோவியத்து அரசின் சட்டங்களும், அறிவுரைகளும் உண்மை யாகப் பின்பற்றப்படுவதுடன், அனைவரும் அவற்றுக்குக் கீழ்ப்

படிவதைப் பற்றி கவனம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

வி.இ.இலெனின்

  • சோவியத்துச் சட்டம் ஒழுங்கு முறையில் மிகச் சிறிய அளவிலான சட்ட மீறலோ, சட்ட மறுப்போ கூட உழைக்கும் மக்களின் எதிரிகள் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஒர் இடைவெளியாகவே

இருக்கும். வி.இ.இலெனின்

  • சட்ட மீறலை ஒரு பெருமையாகவோ, மரியாதைக்குரியதாகவோ

கருத இயலாது. அலெக்சாண்டர் காஸ்பெகி

  • சட்டங்களை மிக நன்றாக எழுதுபவர்கள், மற்றவர்கள் அதனைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறார்களே அன்றி, தங்களின் மீதே அவற்றைத் திணித்துக் கொள்ளும் தேவையை உடையவர்களாக இருப்பதில்லை. ஜி.எஸ்.சொவரோடா
  • மக்களின் மீதும், நாட்டு நடவடிக்கைகளின் மீதும் சட்டம் அதிகாரம் செலுத்தாமல், சூழ்நிலையிலுள்ளவர்கள், தலைவர்கள்,நீதிமன்றங் கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும் ஒரு நாட்டை உருவாக்கச் சூளுரை செய்; உறுதி கொள். எம்.ஐ. குருசோவ்