பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • குடிப்பழக்கம் என்பது பொதுஅறச் சமுதாயத்தை உருவாக்குவ தற்கான உடனடியாக ஒர் அச்சுறுத்தல் ஆகும்; அதனால்தான், ஒவ்வோர் உழைப்பாளியும் ஒவ்வொரு நாகரிகம் படைத்த குடி

மகனும் அதனுடன் இடைவிடாது போராட வேண்டும்.

நிகலாய் செமாச்கோ

  • குடிப்பழக்கம் என்பது அறிவுடமையோ, திறமையோ ஆகாது.

ஜி.எஸ். ஸ்கோவரோடா

  • மது வண்ணமற்றது; ஆனால் அது முக்கைச் சிவப்பாக்கி, நற் பெயரைக் கருப்பாக்குகிறது. ஆன்டன் செகாவ்
  • மது தெளிவான சிந்தனையை இழக்கச் செய்து, மறக்கப்படும் நிலையை உருவாக்கி செயற்கையான உற்சாகத்தை ஏற்படுத் தினாலும், அது எரிச்சலையே ஊட்டுகிறது. மக்கள் குறைந்த அளவு முன்னேற்றம் பெற்றுள்ள போதும், பொதுவான குறுகிய உயிர்வாழ்தல் என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள போதும் இவ்வாறு சிந்தனையை இழக்கச் செய்வதும் எரிச்சலூட்டப்படு வதும் அவர்களுக்கு இன்னும் அதிகக் கவர்ச்சி அளிப்பவையாக உள்ளன. அலெக்சாண்டர் எர்சன்
  • மது மனிதர்களைப் பன்றிகளாக்கி, அவர்களை வன்முறையாளர் களாக்கி, ஒளி படைத்த சிந்தனைகளிலிருந்து அவர்களைத் திசை

திருப்பி, அவர்கள் மனத்தைச் சோர்வடையச் செய்கின்றது.

பியோடர் தோஸ்டோயெவ்ஸ்கி

  • உனது மன ஆற்றல்களைக் குறைத்துக்கொள்ள நீவிரும்பினால்,

மது என்பதே முற்றிலும் நம்பிக்கைக்குரிய ஒரு கருவியாகும்.

வாசிலி தேனிலேவ்ஸ்கி

  • மது ஆண்மாவின் நுண்ணிய, உயர்ந்த இயக்கங்களைச்செயலிழக்கச் செய்கிறது; முதன்முதலாக வெட்க உணர்வு என்பதனையே அது அவ்வாறு செயலிழக்கச் செய்கிறது. இவான் சிர்கோர்ஸ்கி

220