பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • மனித உணர்வுகள் அனைத்தையும் சோர்வுபடுத்துபவற்றில்

எல்லாம் மிக்க வலிமை படைத்தது அச்சமேயாகும்.

கான்ஸ்டாண்டின் உசிண்ஸ்கி

  • தவறுகளுக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கும் ஆழம் மிகுந்த காரணமாக இருப்பது அச்சமேயாகும். காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி
  • நமது நாட்டில், கோழையான ஒருவன், அருவருக்கத்தக்க ஒரு பிறவியேயாகும். இன்று ஒரு தீவிரவாதிக்கு அடுத்தபடியாக, அய்யமற்ற வகையில் போர்க்களத்தில் அவன் ஒர் இரண்டகன்

ஆவான. நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி

  • ஒரு மனிதன் தனது செயல்கள் அனைத்திலும் வீரம், துணிவு

நிரம்பப் பெற்று இருக்க வேண்டும்.

அலெக்சாண்டர் காஸ்பெகி

நிலையற்ற இயல்பைக்கொண்ட ஒரு மனிதன், மனிதர்களில் நஞ்சு

நிறைந்த ஒர் உயிராகும். விசாரியோன் பெலின்ஸ்கி

  • அதிகத் துணிவுடன் வாழு. ஒரு கோழைக்கு மட்டுமே, அனைத்துமே அச்சமுட்டுவதாகவும், கடினமானதாகவும் இருக்கும்; துணிவு நிறைந்தவர்க்குக் கடினமானதும் கூட எளிதானதாகத் தோன்று கின்றது. பியோடர் கிளாட்கோவ்

சிலசிடுப்பு தற்சமுக உறவின்மை, முரண்படுதல்

  • சீற்றம் என்பது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை யெனினும், அதனை வெளிப்பருத்துவர் மீது அது கடினமாகவே உள்ளது. வெஞ்சினத்தில் தொடங்கியது, வெட்கத்தில் முடிவடை கிறது. இலியோ தோல்கதாய்