பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் e த. கோவேந்தண்

  • சூழ்நிலைகளின் மாற்றங்களுக்கு ஏற்றபடி பகைவனுடன் போரிடும் வழிமுறைகளை எவ்வாறு மாற்றிக் கொள்வது

என்பதை நாம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்.

வி.இ.இலெனின்

  • சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவற்றுக் கேற்றவாறு முடிவுகளை மேற்கொள்ளும் துணிவு பெற இயன்ற வர்களாக நாமிருக்க வேண்டும். வி.இ.இலெனின்
  • மிகுந்த தீவிரத்துடன் வணங்கப்படுவது ஐயத்திற்கே வழி வகுக்கும்; அத்தகைய வலிவான மாற்றத்துக்குத் - தேவைப் பருவது எதுவாக இருப்பினும் அதன் தகுதியைப் பற்றி ஐயம் கொள். வி.இ.இலெனின்
  • ஆழ்ந்து சிந்திக்காமல் விரைவாக எந்த முடிவையும் எருக்காதே.

சிந்தித்துப் பார்க்குமுன் எந்தச் செயலையும் செய்யாதே.

அபுல் காசிம் பர்தோசி

  • போர் தொடங்கும் முன்பே தனது தோல்வியை எவண் ஒப்புக் கொள்கிறானோ, அவன் முன்னதாகவே பாதி தோற்கடிக்கப்பட்ட வனாக ஆகிவிடுகிறான். திமிட்ரி பிசரேவ்
  • எந்தத் தடையையும் மிகப் பெரிதாக, எந்த இடையூற்றையும் வலிமை மிக்கதாகக் கருதாமல், உனது குறிக்கோளை நோக்கி வீரநடை போடு; நீ ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பணியைச் செய்து

முடிக்கத் தேவைப்பரும் ஈகத்தைச் செய்து காட்டு .

ஏ.வி. சுவரோவ்

  • நண்பர்களை வெறுப்யூட்டிக் கொண்டும் பகைவர்களுக்கு அஞ்சிக் கொண்டும் தெளிவான் முடிவெடுக்காமல் செயல்படுவதைவிடப் பொது வாழ்விலோ தனிப்பட்ட வாழ்விலோ இடர்ப்பாடானது வேறெதுமில்லை. நிகிலேய் செர்னிசேப்ஸ்கி