பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

தலைவர்களும் தொண்டர்களும்

  • ஒர் அரசியல் தலைவர் தமது தலைமையின் தரத்திற்கு மட்டுமே பொறுப்பானவர் அல்லர், அவர் வழி நடத்திச் செல்பவர்களின் செயல்களுக்கும் பொறுப்பாவார். அவ்வப்போது அவர்கள் செய்வது எது பற்றியது என்று அவர் அறியாமலிருக்கலாம், அவர்கள் ஏதோவொண்றைச் செய்திருக்கவேண்டாமென அடிக்கடி அவர் விரும்பக்கூடும் என்றாலும் அவற்றின் பொறுப்பு அவர் மீதே விழும். வி.இ.இலெனின்
  • உணர்ச்சி வயப்பட்டுச் சீற்றப்படத் தலைவர்கள் உரிமை பெற்றி ருக்கவில்லை. வி.இ.இலெனின்
  • அரசியலில் வெறுப்பு என்பது பொதுவாக அடிப்படை மிகுந்த பண்புருக்களிலேயே செயல்படுகிறது. வி.இ.இலெனின்
  • ஒரு கடமையைப் பொதுவாகக் கருதி ஏற்றுக் கொள்பவர்கள் அதனைக் கைவிட்டு விடுவதையும் ஏதுமற்றதாகவே உணர்வர். - ஜேனிஸ் ரெய்னின்
  • மக்கள் பலரிடம் உள்ள தொல்லை என்னவென்றால், உண்மையில் எதனை அவர்களால் செய்ய இயலாதோ, அதனைத் தங்களால் செய்ய இயலும் என்று நினைப்பதுதான். மாக்சிம் கோர்கி
  • நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது சிறப்பில்லை, ஆனால் எந்த இலக்கை நோக்கி நாம் எந்தத் திசையில் செல்கிறோம் என்பதே இன்றியமையாதது. லியோ தோல்கதாய்
  • ஒவ்வொருவரும் முன்னணியில் இருப்பது எண்பது இயலாதது மட்டு மில்லை, அவசியமற்றதும்கூட. உனக்குரிய வட்டத்தில் உன்னால் இயன்றதைச் செய், அனைவருக்கும் செய்வதற்கான

வேலை போதுமான அளவு இருக்கின்றது.

அலெக்சாண்டர் எர்சன்

23