பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • நமது நோக்கம் கற்றறிவது,மேலும் கற்பது அதன் முலம் எவ்வளவு இயலுமோ அவ்வளவு அறிவினைத் திரட்டுவது என்பதே ஆகும். ஏனெனில், தீவிரமான சமுக எண்ணங்களும், நடைமுறைகளும் அறிவின் மீதே செழிக்கின்றன என்பதாலும், மனித இனத்தின் எதிர்கால மகிழ்ச்சி என்பது அறிவில் இருந்தே வளர்கிறது எண்ப தாலுமே. ஆன்டன் செகாவ்
  • நமக்குத் தேவைப்படுவது அறிவார்ந்த கல்வியறிவுபெற்ற மக்களே. மனித இனம் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்கு அருகில் ஈர்க்கப்படும் போது, பின் ஒரு நாளில் அவர்கள் பெரும்பாண்மையானவர் களாக இருக்கும் வண்ணம், அவர்கள் எண்ணிக்கை பெருகவே செய்யும். ஆண்டன் செகாவ்
  • நமது குறிக்கோள் என்னவென்றால், ஒவ்வொருவரும், அவர் களின் தந்தைகளும் முன்னோர்களும் கண்டும் கேட்டும் அறிந்ததை விட அதிகமாகக்கண்டும்,கேட்டும் கற்றும் அறியவேண்டும்என்பது தான். ஆன்டன் செகாவ்
  • இளைஞனே, கற்றறியும்போது ஒரு மனிதனைப் போல இரு! உன்னால் இயன்ற அளவு மிகச் சிறந்த முறையில் கற்று அறி வது என்பதிலேயே உனது திறமை உள்ளது. நீ ஒரு ஒட்டுண்ணி யாகவோ, உறிஞ்சியாகவோ இல்லாமல் இருக்கவேண்டு மெண்பது உனது ஆண்மையின் பெருமையினால் எதிர்பார்க்

கப்படுவது. மனச் சோர்வுக்கு இடமளிக்காதே.

வாகிலோ சுகோம்லின்ஸ்கி

  • அறிவு என்பது உண்மீது தொருக்கப்படும் தாக்குதல்களில் இருந்து உன்னைக் காக்கும் கவசமாகும். ருடாகி
  • அறிவு என்பதே வலிமை, சூழ்ந்துள்ள இயற்கையின் செயலற்ற தண்மையைவிட எந்த அச்சமூட்டும் தப்பெண்ணம் எதனாலும்

அதனைத் தடுக்க இயலாது. அலெக்சாண்டர் எர்சன்

44