பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • ஒவ்வொரு நாளின் பட்டறிவிலிருந்தும் சிறு சிறு மணிகளாகத் திரட்டப்படுவதென்பதே அறிவாகும். திமிட்ரி பிசரேவ்
  • குனிந்து வணங்கிச் சுரண்டிப் பெறப்பரும் அல்லது செல்வாக்கு மிக்க ஒர் உறவினரின் உதவியுடன் பெறப்பரும் ஒரு பணிவாய்ப் பினை விட, ஒருவரது தன் முயற்சியினால் பெறும் பணிவாய்ப்பே எப்போதுமே நம்பத் தகுந்ததாகவும், அகண்ட பயனளிப்பதுவும் ஆகும். திமிட்ரி பிசரேவ்
  • அனைத்து உண்மையான கல்வியும் முழுவதுமான தன் முயற்சி யால் பெறப்பட்டவையே. என்.ஏ.ருபாகின்
  • மனிதனை எது கல்வி கற்றவனாக ஆக்குகிறதென்றால், அவன் என்ன சிந்திக்கிறான், என்ன பட்டறிகிறான், மற்ற மக்களிட மிருந்தோ, புத்கங்களிலிருந்தோ கற்றவற்றை ஏற்றுக் கொள்வது பற்றி என்ன உணர்கிறான் என்பது போன்ற அவன் உள்ளுறைப் பணிகள்தாம். என்.ஏ.ருபாகின்
  • மற்றொருவருடைய அறிவுரைகள் ஒரு கலந்தாய்வுக் கருத்தே யன்றி வேறெதுமில்லை. என்.ஏ.ருபாகின்
  • நீயாகக் கற்பதை எப்போதும் நிறுத்திவிடாதே, நீ எவ்வளவு கற்றிருந்தாலும், நீ எவ்வளவு அறிந்திருந்தாலும், கல்விக்கு வரையறைகளோ எல்லைகளோ இல்லையெண்பதை எப்போதும் நீ மறந்து விடாதே. என்.ஏ.ருபாகின்
  • தனது முயற்சியின்றி எவரும் தனது குறிக்கோள்களை அடைந்த தில்லை. வெளியிலிருந்து பெறப்பரும் உதவி உனக்குரிய முயற்சி களுக்கான மாற்றாக இருக்க இயலாது. என்.ஏ.ருபாகின்
  • உனது சிந்தனைகளைச் சொல்லாற்றலுடண் வெளிப்படுத்த இயலாமல் இருப்பது ஒரு தவறேயானாலும், உனக்குரிய

51