பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் e த. கோவேந்தன்

  • ஆசிரியர் என்பவர் நேர்மையானவராக இருப்பவரானால், அவர் எப்போதும் கவனத்துடன் விழித்துக் காத்திருக்கும் ஒரு மாணவ னாக இருக்க வேண்டும். மாக்சிம்கோர்கி
  • மேலும் மேலும் கற்றறிந்து கொள்ளாத அல்லது சிறிதளவே கற்றறிந்து கொள்ளும் ஒர் ஆசிரியர் இரக்கத்திற்குரியவராவார்.

மாக்சிம் கோர்கி

  • ஆசிரியரே மிகவும் பொறுப்பு நிறைந்த பணியைத் தனிப்பட்ட

வரை அவர் வடிவமைக்கிறார் . செய்பவராவார்.

மைக்கேல் கால்னின்

  • ஆசிரியர் என்பவர் மனித உயிர்களை வடிவமைக்கும் கலைஞரா வார். மைக்கேல் கால்னின்
  • பழமையான மெய்யியலாளர்களின் நூல்களை இளைஞர்கள் படிக்க வேண்டுமென நாண் விரும்புகிறேன். அவற்றிலிருந்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் எவ்வளவு மரியாதை நிறைந்த வர்களாகவும், அடக்கம் நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதை அவர்கள் காணலாம். மைக்கேல் கால்னின்
  • கற்பிப்பவர் அறிவைக் கற்றுத் தருவதனால் மட்டு மின்றி, தனது பழக்க வழக்கங்களாலும், நடத்தையினாலும், தனது வாழ்க்கை முறிையாலும், எளியவற்றைப் பற்றிய தனது மன நிலை

யாலும் கூட தன் மாணவரைக் கவர்கிறார்.

மைக்கேல் கால்னின்

  • நல்லாசிரியர்கள் நல் மாணவர்களை உருவாக்குகின்றனர்.

$ எம்.வி.ஒஸ்ட்ரோக்ரேட்ஸ்கி

  • ஆசிரியர் தன்னுள்ளேயே ஆழ்ந்த அறிவு, மிகுந்த கட்டுப்பாடு, கருணை, உயர்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். எம்.ஐ. டிராகோமனோவ்