பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

  • கல்வியில் உள்ள இன்றியமையாத ஒன்று என்னவென்றால் குழந்தைக்கு என்ன கற்பிக்கப்படுகிறது என்பது மட்டு மில்லை, ஆனால் அது எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதுதான். எளிமையான, சிக்கல் நிறைந்த பாடங்கள் திறமையுடன் கற்றுத் தரப்பருவது, குழந்தைகளின் அறிந்து கொள்ளுதலுக்குப் பொருத்தமற்ற வகையில் உயர்ந்த வகையான பாடங்களை மட்டமாகக் கற்பிப்பதைவிட, குழந்தையின் எதிர்காலத்துக்கு நூறு மடங்கு பயன் அளிப்பதாகும். நிகலாய் பிரோகோவ்
  • கல்வியறிவினர் உண்மையான நோக்கம் என்னவென்றால்,

மனிதனை மனிதனாக இருக்கப் பயிற்றுவிப்பது என்பதேயாகும். நிகலாய் பிரோகோவ்

  • ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதற்கு, நீ கற்பிப்பதை நீ விரும்புவ துடன், நீ கற்பிப்பவர்களை அன்புடன் விரும்புபவனாகவும் இருக்க வேண்டும். வி.ஏ.குளுசேவ்ஸ்கி
  • சொல்லே தொடர்பின் கருவியாக உள்ள அனைத்துச் செய்தி களிலும், குறிப்பாகக் கற்பிப்பதில், குறைத்துக் கூறுவதோ, மிகைப் பருத்திக் கூறுவதோ முறையானதில்லை. வி.ஏ.குளுசேவ்ஸ்கி
  • ஆசிரியர் தமது சிந்தனைகளைச் சுமையாக்கிக் கொள்வதற்காக அல்லாமல், ஆனால் மற்றொருவருடைய சிந்தனைகளை விழிக்க வைக்கச்செய்வதற்காகவே, அவருக்குச் சொல் என்பது அளிக்கப் பட்டுள்ளது. வி.ஏ.குளுசேவ்ஸ்கி
  • நம்மாணவரிடம் ஊக்கமும், தன்னையே சார்ந்திருப்பதும் வளர்க்கப் படாத வரை அறிவு எண்பது இறந்தது போன்றதே, சிந்திக்கவும்,

சிந்திக்க விரும்பவும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

என்.ஏ. உமோவ்

  • உனது மாணவனை இவ் உலகின் உண்மையான பொருளில் உருவாக்குவதென்பதே அனைத்திலும் இன்றியமையாதது

என்பதை உனது கருத்தில் நீ கொள்வாயாக.

நிகலாய் செரன்சேவ்ஸ்கி

62