பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • கற்பிக்கவும் அறிவுரை வழங்கவும் ஆன உரிமைகளை வயது முதிர்ந்த மக்கள் ஈட்டிப் பெற்றுள்ளனர். இந்த அறமிகு

உரிமையை மதிக்கவும் நீ கற்றுக் கொள்.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • வயது முதிர்ந்தவரின் பேரறிவு இளமை நிறைந்தவர்களின் பெரு மகிழ்வையும் வலிமையையும் வழி நடத்திச் செல்லட்டும், இளமை நிறைந்தவர்களின் மனப்பூரிப்பும் வலிமையும் பேரறிவு படைத்த வயது முதிர்ந்தவர்க்கு ஆதரவாக இருக்கட்டும்.

காண்ஸ்டாண்டின் ஸ்டேனிஸ்லேவ்ஸ்கி

  • ஒரு பொதுவுடைமை சமுகத்தை உருவாக்கும் உண்மையான

பணியை எதிர்கொள்ள வேண்டியவர்கள் இளைஞர்களே.

வி.இ.இலெனின்

  • இளைஞரின் துடிப்பு, பழுத்த வயதின் பேரறிவு - இவையே உலகை உலுக்கும் மாபெரும் வெற்றிகளின் ஊன்றுக் கண்ணாம். ஜி.எம். கிளிஜிசானோவ்ஸ்கி

முதுமை

  • முதுமையில், உனது கண்கள் முன்னேயிருந்து உனது தலை யின் பிண்னே மாறிச்சென்றுவிடுகின்றன; நீ உன் முன்னே எதனை யும் காணாமல், பின்னோக்கிக் காணத் தொடங்கி, நம்பிக்கைகள் எதுவுமின்றி, கடந்த கால நினைவுகளிலேயே வாழ்ந்து கொண் டிருப்பவனாக ஆகிவிடுகிறாய். வி.ஏ.குளுசோவ்ஸ்கி
  • மனிதனுக்கு முதுமை எண்பது, ஆடைகளில் படியும் தூசியைப் போன்றது; அது அவனது பண்புநலன்களில் உள்ள அனைத்துப் புள்ளிகளையும், கறைகளையும் வெளிக்காட்டுவதாக உள்ளது. வி.ஏ.குளுசோவ்ஸ்கி
  • முதுமைக் காலம் பற்றிய சிந்தனையே உனது வயதைக் கட்டு வ தாகும். எபண்டி கபியேவ்

88