பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தண்

  • முதுமைக் காலம் என்பதும், மருத்துவத்தால் நலமாக்கப்பட வேண்டிய எந்த ஒரு நோயினைப் போலவே, தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோயாகும். இனயா மெச்சின்கோ
  • ஆமாம். ஒரு மாபெரும் முதிய மனிதனாக இருப்பதென்பதே ஒரு பெரிய கலையாகும். புதியவையான அனைத்திற்கும் தனது உள்ளத்தைத் திறந்து வைத்திருப்பதும், வளரும் தலைமுறை யினரைப் போற்றிப் பாதுகாப்பதும், அதற்குத் தம் பட்டறிவைத் தாராளமாக அளிப்பதும் ஆன ஒரு பேரறிவு கொண்ட முதிய வரில் உள்ளதைப் போல் முழுமையான அளவில் மனித நேயம் எப்போதுமே விவரிக்கப்படவில்லை என்பது உண்மையானதே. ஏ.வி.லுனாசர்ஸ்கி
  • முதுமைப் பருவம் என்பது விருப்பங்களை வெளிக் காட்டாமலும், ஆழ்ந்த உணர்வுகளை எதிரொலிக்காமலும், ஆனால் அமைதியும், நிறைவும் கொண்டதாக உள்ள தனக்கான நல்லழகைப் பெற்றி ருப்பதாகும். அலெக்சாண்டர் எர்சன்
  • முதுமைப் பருவம் எண்பது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க இயலாது. மகிழ்ச்சியான முதுமைக் காலம் என்ற சொற்கள் அறியாமை நிறைந்த மக்களிடமிருந்து வருபவையாகும். முதுமைக் காலம் எண்பது ஒன்று அமைதியாக இருப்பது அல்லது வருத்தத்துடன் இருப்பதே ஆகும். மதிக்கப்பட்டால் அது அமைதியானதாகவும், புறக்கணிக்கப்படுத்தப்பட்டால் அது துயரமாகவும் இருக்கும். வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • சில நேரங்களில் முதுமை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அது அதனில் உள்ள பழச்சாற்றைப் புளிக்க வைக்கும் நுண்ணுயிர்கள்

வளரும் மதுக் குருவையைப் போன்றுள்ளது.

மைக்கேல் லெர்மெண்டோவ்