பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102




நூல் சுருக்கம் : 3
சிறுகதை

(மாக்கியவெல்லி எழுதிய கதை ஒன்றை இங்கே மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறோம். கட்டுக் கதைபோன்ற அமைப்புடன் நகைச்சுவை நிறைந்த கதை இது)

பேய் கட்டிக் கொண்ட மனைவி
Devil Takes a Wife

பிளாரென்டைன் நாட்டு வரலாற்றின் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், மிகவும் புனிதமான ஒரு மனிதரைப் பற்றிப் படிக்கலாம். அவருடைய வாழ்க்கை முறை, அந்தக் காலத்தில் இருந்த எல்லோராலும் போற்றப்படத்தக்க அளவு உயர்ந்ததாக இருந்தது.

அந்த மகான், பிரார்த்தனையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். தம் பிரார்த்தனையின் மூலமாகக் கிடைத்த சக்தியைக் கொண்டு, ஞான திருஷ்டியால் நரகத்தில் நடப்பதைக் காணக்கூடியவராயிருந்தார். கடவுளின் அருளில்லாமலே இறந்துபோன கணக்கற்ற அழியுந்தன்மையுள்ள உயிர்கள் நரகத்திற்குப் போவதை அவர் கண்டார். அப்படி நரகத்திற்குப் போன உயிர்களிற் பெரும்பாலானவை, தாம் அவ்வாறு துன்பமடைவதற்கு மனைவி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டது தவிர, வேறு எவ்விதமான காரணமும் சொல்லிக் குறைப்பட்டுக் கொள்ளவில்லை.

இந்தக் கருத்து, மீனோஸ் ராதா மந்தூஸ் ஆகிய நரகலோகத்து நீதிபதிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. பெண்ணினத்தின் மீது சாட்டப்பட்ட இந்தப் பழிசொற்களை அவர்களால் உண்மையென்று நம்ப முடியவில்லை. ஆனால், பெண்ணினத்தின் மீது சொல்லப்பட்ட இந்த அவதூறு நாளுக்கு நாள் அதிகமாக இது பற்றிய சரியான முழு விவரங்களையும் அறிய நரகலோகத்து மாமன்னர் புளூட்டோவிடம் கூறியபோது. அவர் நரகலோகத்துச் சிற்றரசர்களையெல்லாம் கூட்டி ஒரு மந்திராலோசனைக் கூட்டம் நடத்துவதென்று திர்மானித்தார். அதன் பிறகு இந்த அவதூறு பொய்யானதாக இருந்தால் இதை ஒழித்துக் காட்டுவதற்கும், அல்லது இதுபற்றிய முழு உண்மையையும்