பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

கண்டுபிடிப்பதற்கும் தான் சிறந்ததாகக் கருதுகிற ஆலோசனையை ஏற்றுக் கொள்வதென்று எண்ணினார். ஏற்பாட்டின்படி ஆலோசனை சபை கூடியபோது புளூட்டோ இவ்வாறு பேசினார்.

“பேரன்புக்குரிய நரகலோக வாசிகளே! தேவலோக முறைப்படியும், தெய்வீகமாகவும் மாற்ற முடியாததாகவும் உள்ள நல்லதிர்ஷ்டத்தினாலும் நான் இந்த சாம்ராஜ்யத்திற்கு உரியவனாயிருக்கிறேன். இருந்த போதிலும், சக்திமிகுந்தவர்கள் எல்லாம், நீதிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயத்தில், தங்கள் பேரறிவைப் பெரிதும் பயன்படுத்துவதுண்டாகையாலும், மற்றவர்களுடைய நியாய முடிவுகளைப் பெரிதும் மதித்து உயர்வாகக் கருதுவதுண்டாகையாலும், நான் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து வருகின்ற இந்தப் பரமண்டல சாம்ராஜ்யத்திற்கே அவமானம் வரக்கூடிய ஒரு விஷயத்தில், உங்களுடைய ஆலோசனைகளைப் பெறுவதென்று முடிவு செய்துவிட்டேன். நம் இராஜ்யத்திற்கு வந்து சேருகின்ற ஒவ்வொரு மனிதனுடைய ஆவியும், தான் பாவியானதற்குக் காரணம் தன் மனைவியே என்று கூறுகின்றது. இது முற்றிலும் நம்பக்கூடாத காரியமாக நமக்குத் தோன்றுகிறது. இந்தச் சாட்சியத்தை வைத்து நாம் தீர்ப்புச் சொல்வதென்றால், நாம் பெரும் பேதைகளாய் அல்லது ஏமாளிகளாய் ஆகிவிடக் கூடுமோ என்று பயப்படவேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்புச் சொல்லாவிட்டால், நீதியிடத்தில் நமக்குக் கண்டிப்பான தன்மையும் பற்றும் பிடிப்பும் இல்லையென்றாகிவிடும். இந்த விஷயத்தில் எமக்கு ஒரு வழியும் தோன்றாதிருப்பதால், உங்களுடைய அரிய ஆலோசனைகளைக் கேட்பதற்காகவே இந்த சபையைக் கூட்டியுள்ளோம். குற்றச்சாட்டிற்கிடமில்லாதபடி, அவதூறுக்காளாகாதபடி இந்த சாம்ராஜ்யம் முன்போலத் தொடர்ந்து சிறந்து நடைபெற ஆலோசனை கூற உதவுவீர்களென எதிர்பார்க்கிறேன்”,

நரகலோகத்துச் சிற்றரசர்கள் எல்லோரும் இந்த விஷயம் அதிமுக்கியத்துவமும் ஆவசியகமும் நிறைந்ததென்றும், உண்மையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டுமென்றும் முடிவு செய்தார்கள். ஆனால் அதை எவ்வாறு செய்வது என்ற பிரச்சினையில் அவர்கள் ஒரேமாதிரியான கருத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், ஒரு சிலர் தங்களில் ஒருவர் மனித உருவமெடுத்துக்கொண்டு பூமிக்குப்போய் உண்மையை