பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

உங்களையறியப் பியாம்பினோவை அடிக்கடி நம்புகிறேன். அடிக்கடி பியாம்பினோவிலிருந்து வரும் ஆளைப் பார்க்கிறேன். அவன் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறான்) உங்களில் ஒருவன் வெளிச்சம் இல்லாமலும் இன்னொருவன் அதிக வெளிச்சத்தினாலும் அவதிப்படுகிறார்கள் என்று நிச்சயமாக நினைக்கிறேன். உங்கள் காரியக்காரர்களில் ஒருவன் முட்டாளாகவும் மற்றொருவன் அயோக்கியனாகவும் இருப்பதால்தான் உங்கள் உடன்பாட்டுப் பேச்சு வார்த்தைகள் ஒரு பலனும் இல்லாமல் போய்விட்டன என்பதை நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். பிப்ரவரி சரியாக இருக்கும் வரை நான் ஜனவரியைப் பற்றிக் கவலைப்படவில்லை. தற்போது காரியம் வெற்றிகரமாக முடியும் என்று தோன்றுகிறபடியால் போன மாதம் பேச்சு வார்த்தைகள் முறிந்து போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. பிலிப்போவின் சந்தேகத்தைக் கண்டு வருந்திப் பலனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேற்படியாரை பிலிப்போ நம்பாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். என்ன நடக்கிறதென்று எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கடிதம் சுருக்கமாக இருந்தாலும், திரும்பத் திரும்பப் படித்து அதை விரிவாக்கி விளக்கம் அடைந்தேன். உண்மையில் நான் தயக்கமடைந் திருக்கிறேன். கடிதத்தின் இந்தப்பகுதிதான் சரியாகப்பட வில்லை. {மேற்படியாரைப் பார்க்க நான் தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்கள் கடிதத்தில் உள்ள குறிப்புப்படியே நடந்து வருகிறேன். நான் அவரைச் சந்திக்க முடிவு செய்து கொண்டேன். அவரைப் பற்றித் தாங்கள் பயப்படுவது அர்த்தமற்றது. நீங்கள் சொல்கிறபடி அவர் பேசியிருப்பார் அல்லது செய்திருப்பார். உங்களையும் உங்கள் பிரயாணத்திசையையும் நான் அறிவேன். உங்களுக்குத் தேவை என்ன என்பதும், நீங்கள் அது பற்றி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்கள் போக்கில் தவறு கண்டாலும் நான் அதைக் கண்டித்துரைக்க மாட்டேன். அது உங்களுக்கு அளித்திருக்கும் வெற்றியை எண்ணும்போது கண்டிக்க முடியாது. அது மேலும் வெற்றி தருமென்று நம்புகிறேன்.

அறவொழுக்கமும் அறிவு நுட்பமும் உடைய உங்களுடைய நிலையைக் கொண்டு தீர்மானிக்காமல், பலப் பலருடைய நிலையைக் கொண்டு தீர்மானிக்கும்போது, அரசியல்