பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60



ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை; பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை. இது பயனற்றது. இதில் முதல் இரண்டு வகை மூளைகளையுடையவர்களைத் தான் அரசன் தன் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.

ஓர் அமைச்சன் தன் அரசனைக் காட்டிலும் தன்னையே உயர்வாக மதித்தும். எந்தக் காரியத்தையும் தன் இலாபத்திற்காகவே செய்தும் வரக்கூடியவனாக இருந்தால் அவனை நம்பியிருக்கவே முடியாது.

பொதுவாக ஓர் அரசன் தன் அமைச்சர்களுக்கு கௌரவங்களும், பொறுப்புள்ள வேலைகளும், செல்வமும் செல்வாக்கும் நிறைய அளித்து அவர்கள் அதற்கு மேற்பட்ட ஆசைகொள்ளாதிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் பதவியில் மாறுபாடு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அமைச்சன் பயந்து கொண்டிருக்கும்படியும் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட உறவு நிலை அரசனுக்கும் அமைச்சனுக்கும் இடையில் இருந்தால் அவர்கள் ஒருவரையொருவர் நம்பியிருக்க முடியும். இல்லா விட்டால், இருவரில் ஒருவருக்குத் தீமையே உண்டாகும்.

முகஸ்துதி:

முகஸ்துதி மனிதர்களை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். இப்படி நடந்து கொள்பவர்களிடம் எல்லோரும் உண்மையையே பேசவேண்டுமென்பதை அறிந்து கொள்ள வாய்ட்பேற்படுகிறது. ஆனால் எல்லோரும் உண்மையையே பேசினாலும் அவர்களுடைய தகுதிகளை உணர முடியாது.

விவேகியான ஓர் அரசன் வேறொரு வழியைக் கையாளுகிறான். தன் ஆலோசனை சபையில் அறிவாளிகளைச் சேர்த்து அவர்களை மட்டுமே தன்னிடம் உண்மைகளைப் பேசும்படி செய்கிறான். ஆனால், அவர்களும் தான் கேட்கும் விஷயங்களைப்பற்றி மட்டுமே பேச உரிமை கொடுக்கிறான். அப்படி அவர்கள் கூறிய விஷயங்களையும்