பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல் தன் போக்கில் ஆராய்ந்து முடிவு செய்து கொள்கிறான். தன் முடிவில் அவன் உறுதியாகவும் நிற்கிறான். இப்படியில்லாமல், முகஸ்துதிக்கேற்ப முன்யோசனையில்லாமல் நடப்பவனும், வெவ்வேறுவிதமான கருத்துக்களுக்கேற்ப மாறி மாறி நடப்பவனும் மதிக்கப்படமாட்டான்.

ஓர் அரசன் தான் விரும்புகிறபோது ஆலோசனை சபையைக் கூட்ட வேண்டுமேயில்லாமல், தான் கேட்காமலே தனக்கு யோசனை செய்ய முற்படுவதைத் தடுக்க வேண்டும். ஆனால், கேள்விகள் கேட்பதில் மிகப் பெரியவனாகவும் சொல்லப்படும் உண்மைகளை ஊன்றிக் கவனிக்கும் பொறுமையுடையவனாகவும் அவன் இருக்க வேண்டும். ஓர் அரசன் அறிவுள்ளவன் என்பதை அவன் இயல்பைக் கொண்டு பார்க்கவேண்டியதில்லை என்றும், அவனுடைய ஆலோசனையாளர்களைக் கொண்டே தீர்மானித்துவிடலாம் என்றும் நினைப்பவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

தானே புத்திசாலியாக இல்லாத அரசன், சரியான யோசனைகளை அறிந்து கொள்ளக் கூடியவனாக. இருக்கமாட்டான். சொல்லப்படும் ஆலோசனைகளை ஒன்று சேர்த்து ஒரு முடிவுக்கு வர அவனால் முடியாது. அப்படிப்பட்டவனிடம் ஆலோசனையாளர்கள் தங்கள் நன்மைகளைச் சாதித்துக் கொள்ளும் நோக்கத்தோடு தான் நடந்து கொள்வார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளவோ திருந்தவோ முடியாதவனாக அவன் இருப்பான். எவ்வளவு புத்திசாலித்தனமான யோசனையாகயிருந்தாலும், அது யாரிடமிருந்து வந்தாலும், அரசனும் புத்திசாலியாக இருந்தால்தான் ஒப்பேறும். ஆகவே, புத்திசாலித்தனமான யோசனைகளைக் கொண்டு அரசனைப் புத்திசாலியாக மதிக்க முடியாது.

எப்பொருள் பார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

- திருக்குறள்

தன்கையே தனக்குதவி :

இதுவரை குறிப்பிட்ட விஷயங்களை நல்லறிவோடு பின்பற்றி வந்தால், எந்தப் புதிய அரசனும், நீண்ட நாளாக அரசராயிருந்து வருகிறவர்களைக் காட்டிலும் பத்திரமாகவும்,