பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

1591561. “நம் தலைமுறையில்-புண்ணிய பாரத பூமியில் மதத்தின் பெயரால் இரண்டு படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன. இது வெட்கப்படவேண்டிய செய்தி.”

1562. “அருளும் தெய்வமே, அடிக்கவும் செய்கிறது. இது தவிர்க்க இயலாதது.”

1563. “திட்டமிட்டுச் செய்தால்; செல்வம் சேர்ந்துவிடும்.”

1564. “பணிகளை நாமே செய்வது நல்லது”

1565. “கால்பந்து விளையாட்டில் பலர்-மிகுதியான உழைப்பில்லாமல்-உருண்டுவரும் பந்தைத் தொட்டு உருட்டி மற்றவர்களுக்குத் தந்துவிடுவர். தாம் முயன்று கோல் போட மாட்டார். அதுபோல பணிகளைக் கடத்தி விடுபவர்கள் பலர்.”

1566. “விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள் பந்தைக் கேட்டு வாங்குவார்கள்.”

1567. “தெரிந்த ஒரு செய்தியையும் பணியையும் திட்டமிட்டுப் பயனுறச் செய்யாமை இழுக்கு.”

1568. “பலநாள் பழகினாலே, பழக்கம் உறுதி பெறும்.”

1569. “கால்கள் இருந்தும் காலால் நடக்கும் துரத்துக்குக்கூட ஊர்தி தேடி அலைபவன் சோம்பேறி.”

1570. “வாழ்க்கையில் கை வகிக்கின்ற பங்கு அளப்பில.”

1571. “பலர் விவாதிக்கவே விரும்புகின்றனர். கலந்து பேச யாரும் முன்வருவதில்லை”.

1572. “சுமத்தப் பெறும் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாமல் திரும்ப குற்ற்ச்சாட்டு வைப்பது