பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு அடிகளார்


ஏராளமான வரலாற்றுண்மைகள் கிடைக்கும். செயற்பாட்டுக்குரிய உந்து சக்திகளும் கிடைக்கும்.”

1708. “தன்னலம் என்பது பேயினும் கொடுமையானது.”

1709. “பிறர் நலம் பேணியதால் கெட்டார் யாரும் இல்லை”.

1710. “இந்தியாவில் மக்களாட்சி முறை இல்லை குழுக்களின் ஆட்சிமுறையே உள்ளது.”

1711. “அரசாங்க இயந்திரம் - ஒரு சரக்குந்து வண்டி, அதன் உயிர்ப்புள்ள செயற்பாடு இருக்காது.”

1712. “சிலரை எழுப்பவே இயலவில்லை; அவர்களை நொந்து காலங்கடத்துவதைவிட எடுத்துச் செய்வது நல்லது.”

1713. “முயற்சியுடைய வாழ்க்கையில் வரும் இடர்கள்-வெற்றியைத் தடுத்துவிடாது.”

1714. “இடர்கள் வேறு - இயலாமை என்பது வேறு.”

1715. இடர்களையே இயலாமை கருதுகிறவர்களால்-காரிய சாதனை செய்ய இயலாது.”

1716. “செல்வம் பெறுதல் பெரிதல்ல-பேனுதலே அரிய கடமை.”

1717. “வாய்க்கும் காலத்திற்குரிய பணியிதுவென நிர்ணயித்து செய்க, இப்படிச் செய்க, இப்படிச் செய்தால் பணிகளின் சுமை குறையும்; காலம் மிஞ்சும் ஒரு போதும் நெருக்க வராது.”

1718. “ஆசிரியர்களுக்கு பள்ளியே திருக்கோயில்: மாணவர்களே விக்ரகங்கள்; அறிவே நிவேதனம்.”