பக்கம்:சிந்தனை மேடை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வேண்டுமென்று நாம் ஆசைப் படுகிருேம். அப்படி அளவிடப் பெருமல் வேறு விதமாக அளவிடப்படுவதைக் காணும் இடங்களில் எல்லாம் மனம் நோகிருேம். ஆடம்பரங்களா லும் பதவிகளாலும் செல்வத்தாலும், மனிதனை அளக்கப் பழகிக் கொண்டு, மனிதத் தன்மைக்காக அளக்கத் தெரியா மல் விட்டுவிடுகிற இடங்களைக் கண்முன் காண்கிறபோதெல் லாம் நியாய தேவதை உங்கள் மனத்தில் வந்து நின்று குமுறு கிருள். அர்த்தமுள்ள பழைய சடங்குகளை விடுவதைப்போல் அர்த்தம் இல்லாத புதிய சடங்குகளை ஏற்பதும் தவறுதானே? நிறையாத மனம் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இரண்டு பிரிவுகள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. வாழ் வதற்கு ஆசைப் பட்டுக் கொண்டிருக்கும் வாழ்க்கை. இவற். றில் இரண்டாவது பிரிவு மிகவும் அந்தரங்கமானது. அன்றியும் மனிதனுடைய நினைவை அதிகமாக ஆக்கிர மித்துக் கொண்டிருப்பது வாழ்ந்து கொண்டிருப்பதைவிட வாழவ்ேண்டியதற்கு ஆசைப்படுவது அதிகம் என்பதை அந்தரங்கமாக வைத்துக் கொண்டாலும் மனித இயல்பை ஒட்டி அதை நாம் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக நடுத்தரக் குடும்பத்து மனிதர்களில் நூற்றுக்குத தொண் னுாறு பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற நிகழ்காலச் சூழ் நிலையை முற்றிலும் நிறைவாக நம்பிவிடாமல் வாழ ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிற சூழ்நிலையை எதிர்பார்த்தே வாழ் கிரு.ர்கள். வசதிகளோடு கட்டுப்பாடும், திட்டமும் உள்ள ஒழுங் கான வாழ்க்கையை இன்றுவரை ஏதேதோ காரணங்களால் தான் வாழ முடியாமல் போய்விட்டது போலவும், இனி மேல்தான் அந்த வளமான வாழ்க்கையை அநுபவிக்கும் சுக மான நாட்கள் தன்னுடைய வாழ்க்கையில் நேர வேண்டும் போலவும் ஒவ்வொரு மனத்திலும் ஒர் ஏக்கம் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/26&oldid=825891" இலிருந்து மீள்விக்கப்பட்டது