பக்கம்:சிந்தனை மேடை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புகழுரைகளில் நகைச்சுவை கலவாது. பாராட்டுக் கூட்டத் துப் புகழுரைகளில் நகைச்சுவையும் கலந்து பேசப்படும். கண்டனக் கூட்டத்திலும் குத்தலான நகைச்சுவை இடம் பெற வழியுண்டு. அரசியல் கூட்டங்களுக்கும் புள்ளி விவரங் களுக்கும் தொடர்பு அதிகம். இலக்கியக் கூட்டங்களுக்கும் மேற்கோள்களுக்கும் நெருக்கம் மிகுதி. கதா காலட்சேபக் கூட்டங்களுக்கு உபகதைகள் உயிர்நாடி போன்றவை. சமையலுக்கு அவசியமாகத் தேவையான உப்பு, அளவுக்கு அதிகமாகி விட்டால் அதுவே சமையலைக் கெடுத்துப் பாழாக்கி விடுவதைப் போலச் சொல்லும் கதையை விஞ்சிக் காடுமண்டினுற் போன்ற அதிக உபகதைகள் முக்கிய நோக்கத்தின் சுவையைக் குறைத்தும் விடலாம். பேச்சுக் குழப்பம் சில கூட்டங்களில் பேச்சாளர்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் கேட்பவர்கள் குழப்பம் விளைவிப்பதைப்போல் கேட்பவர்கள் புரித்து கொள்ள வழியின்றிப் பேச்சாளர்களே குழப்பம் விளைவிப்பதும் உண்டு. ஒன்றரை மணி நேரத்துக் குள் நடத்தி முடிக்க வேண்டிய ஒரு கூட்டத்தில் வரவேற். புரை கூற வேண்டியவரே முக்கால் மணி நேரத்தை iளுக்கி விட்டால் தலைமையுரை சொற்பொழிவுகள், நன்றியுரை எல்லாவற்றையும் திட்டமாகச் செய்வதற்கு நேரம் இல்லா மல் போய்விடும். வரவேற்புரை கூறுகிறவர் தம் நீண்ட வரவேற்புரையைக் கூறி முடிப்பதற்குள் தலைவர் தமக்கு அணியப்பட்ட முழு நீள ரோஜாப்பூ மாலையை ஒவ்வோர் இதழாக மென்று தின்று விடலாம் போல் அவ்வளவு நேரம் செலவழியும். வரவேற்புரை கூறிக் கொண்டிருக்கும் போதே திரும்பிப் போய்விடலாம் போவக் கூட்டத்தினரை அலுக்கச் செய்து விடுவார்கள் சில வரவேற்பு’ (இப்படிப் பட்ட வரவேற்பு உரையாளர்கள் பேசப் பேசக் கூட்டத் தினருக்கு வேர்த்துக் கொட்டுமாதலால் இவர்கள் செய்வதை வர வேர்ப்பு என்றே கூறி விடலாம்!) உரையாளர்கள். இதே அலுப்பை நன்றி கூறலே நீட்டி முழக்கும் சிலரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/42&oldid=825926" இலிருந்து மீள்விக்கப்பட்டது