பக்கம்:சிந்தனை மேடை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 செய்ய முடியும். நன்றியை அதிகமான வார்த்தைகளால் புகழ்ந்து சொல்வ்தே அதன் கெளரவத்தைக் குறைப்ப தாகும் என்று உணர வேண்டாமோ? எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே சொல்ல எண்ணுகிறேன். நல்ல தை மாதத்து வெள்ளிக்கிழமை நாளில் மாதர் சங்கக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு ஒரு பேராசிரியரை அழைத்திருந்தார்கள். பேச்சைக் கேட்பதற் குக் கூடியிருந்த அத்தனே பேரும் சுமங்கலிகள். பேராசிரி யரோ கொஞ்சம் அசடு. சகோதரிகளே! திலகமிழந்து திருமாங்கல்யமுமின்றி மூளிக் கைகளோடு பிச்சைக்கு வரும் அநாதைப் பெண்களைப் பார்க்க நேரும்போது எல்லாம் எனக்கு உங்கள் சங்கத்தின் பணிகள் நினைவுக்கு வரும். நமது நாட்டில் ஒரு காலத்தில் பெண்மைக்கு எவ்வளவு பெருமை இருந்தது?’ என்று பேச்சைத் தொடங்கியபோதே சிவ. சிவா! தை வெள்ளிக்கிழமையும் அதுவுமாக விளக்கேற்றுகிற நேரத்தில் இந்த அமங்கலமான பேச்சைக் கேட்பதற்காகவா நாம் இங்கே வந்தோம்?’ என்று கூடியிருப்பவர்கள் கூசும் படி எவ்விதமாகவோ பேச்சைத் தொடங்கினர் அவர். இப்படிச் சந்தர்ப்பத்துக்கும் இடத்துக்கும் பொருந்தாமல் தொடங்கப் படுகிற பேச்சு-வெறுக்கப்படும். நல்ல ஆரம்பம்-கணிரென்று எடுப்பு-இவை ஒரு சிறந்த சொற் பொழிவுக்கு முதலில் வேண்டிய அடையாளங்கள். . கூட்டத்தில் தான் பேசவேண்டிய பொருளைப்பற்றி முழு வதும் மறந்து போய்விட்டுத் தனக்கு முன் பேசியவர் தம் பேச்சில் விட்டுப் போயிருந்த பிரச்னைகளை எடுத்துக் கிண்டிக் கிளறி அலுத்துக் கொள்கிற பேச்சாளர்களும் உண்டு. மேலே கூறிய மாதர் சங்கத்தில் அந்தப் பேராசிரியர் தை வெள்ளிக்கிழமையும் அதுவுமாக இப்படிப் பேசிய நிகழ்ச்சிக் குப் பின் அச்சங்கத்தில் ஆண் பிள்ளைகளையே பேசக் கூப்பிடு வதில்லை என்று தீர்மானம் செய்து விட்டார்கள். பின் வேறென்ன செய்வார்கள்? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/43&oldid=825929" இலிருந்து மீள்விக்கப்பட்டது