பக்கம்:சிந்தனை மேடை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 வைத்திருக்கும் மாடிப் படியில் காலுள்ளவன் ஏறுவதுபோல் அத்தனை இயல்பாக இல்லை. சுகங்களை நாடி நடக்கும்போது நாம் நொண்டி நொண்டி நடப்பதை ஒவ்வொரு விநாடியும் நன்ருக உணர்கிருேம். யதார்த்த நிலையை முற்றிலும் மறக் கச் செய்கிற கவர்ச்சி எந்தக் கலையில் இருந்தாலும் (அந்தக் கலையின் இயல்புக்கு அது பொருத்தமாய்த் தோன்றிலுைம்) அது சமூகத்துக்கு நீடித்த நலனைத் தராது. நடைமுறை உலகத்துக்குப் பயன் தரக்கூடிய நம்பிக்கைகளையும், உழைப் பையும் மறக்கச் செய்கிற எந்தக் கலையும் அபினியைப் போன்றதுதான். பரிசுத்தமான கலைகள் என்பவை தேசத் தின் நிரந்தரமான புகழைத் தாங்கும் துரண்களைப் போன்றவை. துரண்கள் தளர்ந்து போய்க் கட்டையை முட்டுக் கொடுப்பது போன்ற பலவீனமான புகழ்ச்சிகள் புராதனமானதொரு தேசத்துக்குக் குறைவு தருவனவே. எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க லாம். ஒரு மில் முதலாளியின் மகள் தன்னுடனே கல்லூரி யில் படிக்கும் மத்தியதாக் குடும்பத்து இளைஞன் ஒருவனே மணக்க விரும்புவதாக இடைவேளை வரை ஒடுகிற திரைக் கதை-இடைவேளைக்குப் பிறகு திடீரென்று நிகழ்ச்சிகளால் விரைவாக நிறைந்து ஒடி அதே மத்தியத்தரக் குடும்பத்து இளைஞன் குபேரசம்பத்துக்கு அதிபதியாகி விரும்பிய பெண்ணையே மணந்து கொள்வதாக முடிகிறதென்று வைத்துக் கொள்வோம். படத்தின் நீளம், ஒடுகிற கால அளவு, படிப்படியான நிகழ்ச்சிகள் இவற்றுக்கு ஏற்றபடி சுக துக்க ஏற்றத் தாழ்வுகள் அமைக்கப் படாமல் ஏனே தானே என்று அமைக்கப் பட்டிருந்தால் பார்க்கிறவர்களுக்கு வாழ்க் கையைப் பற்றியே பொய்யான நம்பிக்கை ஏற்பட்டுவிடும். முறையுள்ள படிப்படியான உழைப்பையும் படிப்படி யான முயற்சிகளையும் இணைத்துக் காட்டாமல் செப்பிடு வித்தையைப் போலப் பிரமையான சுகங்களை முன் நிறுத்திக் காட்டும் கலைகளால் நிரந்தரமான குணங்கள் பாதிக்கப் படும். பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், பிறரும், இப்படிப் பிறழ உணர்வதன் காரணமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/49&oldid=825939" இலிருந்து மீள்விக்கப்பட்டது