பக்கம்:சிந்தனை மேடை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒生 மான பத்திரிகை, மோசமான புத்தகம், எல்லாவற்றுக்கும் மதிப்பு இருக்கிறது என்பது பிரத்தியட்சம். பிரத்தியட்சம் இப்படி இருக்கும்போது அநுமானங்களே வைத்து மட்டுமே நாம் விவாதிப்பதால் என்ன பயன்? பிரத்யட்சத்தை வைத்து விவாதிக்கப் புகுந்தால் பாரதி தொழில்’ என்று கூறிய அர்த்தத்திலும் இன்று எழுத்தோ இலக்கியமோ தொழிலாக இல்லை. நாம் 'கலே’ என்று கருதுகிற அர்த்தத் தில் அது கலேயாகவு மில்லே, கலையாக இருக்க வேண்டு மென்று நாம் ஆசைப்படுகிருேம், சந்தர்ப்பமும் சூழ் நிலை களும் அதைப் பெரும் வியாபாரமாக மாற்றிக் கொண்டு வருகின்றன. அதிகமானவர்களால் படிக்கப்படும் மோச மான இலக்கிய ஆசிரியன் குறைவானவர்களால் படிக்கப் படும் நல்ல இலக்கிய ஆசிரியன் தன்னைவிடக் கீழானவன் என்றெண்ணிப் பொய்ப் பெருமித மடைகிற பிரத்யட் சத்தை இங்கே நாம் காணுகிருேம். அதிகமாகப் பணம் வாங்கி மோசமாக எழுதும் எழுத்தாளன் ஒருவன் குறை வாகப் பணம் பெற்று நன்ருக எழுதும் ஒருவனைத் தன்னினும் குறைவாக எண்ணிப் போலிக்கர்வம் அடைகிருன். இப்படிப் பட்ட பிரத்யட்சத்தில் விவாதிப்ப்தற் குரிய ஒரு சூழ்நிலை கூட இல்லே. ஏனென்ருல் பாரதி கூறியது போன்ற தொழி லாக எழுத்தை ஆக்கிவிட நம்மில் சிலர் அவாவுகிருேம். அது ஒன்றைத்தான் காரணமாகக் கூற முடியும். வளரும் இசைக்கலை நான்கைந்து ஆண்டுகளாக இசைக்கலை தமிழகத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் பெற்று வருவது கண்கூடு. அக்கலையில் ஆர்வமும் ஊக்கமும் கொண்டு பயிலுவோர் தொகையும் நாளுக்கு நாள் பெருமை அடைந்து வருகிறது. இசையை விரும்பிச் சுவைக்கும் சுவைஞர் தொகையும் மிகுதி யடைகின்றது. இசையியல் தெரிந்து அதனைப் பயிற் றும் இசைப் பேராசிரியர்களும், இசைக் கல்லூரிகளும். கழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/86&oldid=826018" இலிருந்து மீள்விக்கப்பட்டது