பக்கம்:சிந்தனை மேடை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


நிறைந்து மணக்க வேண்டும். இனிமையும் பண்பும் உள்ள பேச்சு அப்படித்தான் இருக்க முடியும்.

அருளும் அன்பும் நிறைந்த காமகோடிப் பெரியவர்களுடைய திருமுன்னர் அமைந்து அவர்கள் பேசுவதைக் கேட்கிறவர்களும், தமிழ் முனிவர் திரு வி. க. அவர்களோடு முன்பு அவர் வாழ்ந்த காலத்தில் அமர்ந்து உரையாடும் பேறு பெற்றவர்களும், பூக்கள் உதிர்வது போல் மணக்க மணக்க அவர்கள் பேசும் மென்மையையும், இனிமையையும் நன்றாக உணர்ந்திருக்க முடியும்.

'காட்சிக்கு எளிமை' என்பது தோற்றத்தைமட்டும் பொறுத்ததில்லை. மலர்ந்த முகம், மலர்ந்த பேச்சு, மலர்ச்சி யோடு பழகுதல், இவையெல்லாம் ஒன்று சேர்ந்துதான் காட்சிக்கு எளிமை; பெரிய பெரிய அலுவலகங்களிலும் அரசினர் பணிமனைகளிலும் இன்று தேடித் தேடித் தவித்தாலும் கிடையாத பண்பாக இருப்பதும் இதுதான். தங்களுடைய நிலைக்குக் குறைந்தவர்கள் என்கிற காரணத்தால் சிலரைச் சந்திப்பதற்கே பொறுமையின்றி வெறுத்து ஒதுக்குகிறவர்களையும் அப்படியே தப்பித் தவறிச் சந்தித்தாலும் சிரித்துப் பேசாமல் எரிந்து விழுகிறவர்களேயுமே இன்று நம்மைச் சுற்றிலும் அதிகமாகப் பார்க்கிறோம். ஒரு நாட்டின் பொதுவாழ்க்கையில் சுமுகமான உறவுகள் இல்லை என்பதைத்தான் இந்தக் கடுமையான சூழ்நிலையிலிருந்து நாம் புரிந்து கொள்ள இயலும்.

மென்மையும் பண்புமுள்ள பேச்சுக்கள் எந்த நாவிலிருந்து ஒலிக்கின்றனவோ, அந்த நாவிலிருந்து பிறருடைய செவிகளுக்கு மலர்ச்சியும் கிடைக்கின்றன அ ந் த நா விவிருந்து பிறக்கும் சொற்கள் விலைமதிப்பற்றவை.

பிறரிடம் சொற்களை விட்டெறிவது போல் பேசுவதுகூட ஒரு வகைக் கொலைத் தொழில் என்றுதான் சொல்ல வேண்டும். பிறருடன் எளிமையாகவும், அழகாகவும். அளவாகவும் பழகுவதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்லலாம். பழைய நாட்களில் பெண்களுக்கு வளையல் விற்பவர்கள் தெருத் தெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/9&oldid=1319538" இலிருந்து மீள்விக்கப்பட்டது