பக்கம்:சிந்தனை வளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சிந்தனை வளம்

செய்து வழக்கமில்லாத வழக்கமாக அவரைத் தமது uேide’ ஆக ஏற்ருர். பொதுவாக, கெளரவ டாக்டர் பட்டம் பெறு கிறவர்கள் பிறருக்கு வழிகாட்ட முடியாது. "இங்கே அது மீறப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வி. ஸி. ரிஜிஸ்தர் செய்திருந்த தீஸிஸை (Thesis), அவருக்காகச் சர்வகலா சாலையின் டிபார்ட்மெண்டே அவர் பெயரில் வேகமாக எழுதித் தயாரித்தது. நீதிபதியைத் தவிர நம்பக மான வேறு இரண்டு ரெஃபரிகள் (Referees) நியமிக்கப் பட்டு ஸப்மிட் செய்த மறுநாளே மூன்று பேருமாக ஒத்த கருத்துடன் (Umaminious) அந்த ஆராய்ச்சியைச் செய்த வருக்குப் பி. எச். டி. வழங்கலாம் எனச் சிபாரிசு செய்து, சிண்டிகேட்டும் உடனே அதை ஏற்றுக்கொண்டு விட்டது.

ஆராய்ச்சிக்கு ரிஜிஸ்தர் செய்த நாளிலிருந்து மூன்று. வருஷங்களுக்குக் குறையாமல் ஆராய்ச்சி செய்த பின்பே. தீவிஸ் ஸப்மிட்' செய்யலாமென்பது பொதுவான வழக்கம். "ஸ்பெஷல் கேஸ் என்ற வகையில் சுலபமாக மீறப்பட்டு, ரிஜிஸ்டர் செய்து முடித்த ஒரு மாதத்துக்குள்ளேயே பி. எச். டி. அந்த வி. வி. க்காகத் தயாராகி விட்டது. வி. வி. அடுத்த மாதம் ரிட்டையராகப் போகிருர் என்ருல் இந்த. மாதமே பி. எச். டி. ரெடி.

நல்ல வேளையாக இந்த அநியாயத்தைக் கண்டு மனங்: குமுறிய சிலர். துணிந்து சான்ஸ்லர் (கவர்னர்) வரை எழுதி . கவர்னர் அந்த வி. வி. மீது விசாரணைக் கமிஷன் போட லாமா என்ற நிலை வந்த போது, கனம் வி. ஸி. காதும் காதும் வைத்தாற்போல் தமது பி. எச். டி. ரிஜிஸ்டரேஷனை வாபஸ் வாங்கிக்கொண்டு, கெளரவமாக விலகிக், கொண்டார். இது கட்டுக் கதைஇல்லை. நம்நாட்டில் நடந்த, கேவிக் கூத்துத்தான். இடம், பெயர் தான் இங்கு எழுத. வில்லையே தவிர அனைத்தும் உண்மை. * --

பலரிடம் நான் கேள்விப்படுவது நிஜமாயிருக்கும். பட்சத்தில் (பொய்யாயிருக்குமென்றும் தோன்றவில்லை), சுதந்திர இந்தியாவில் சில குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/112&oldid=562354" இலிருந்து மீள்விக்கப்பட்டது