பக்கம்:சிந்தனை வளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 115

புது வகை பிளாக் மார்க்கெட் வியாபாரமாக-கல்வி என்ற ஒரு புனிதமான லேபிளேயும் ஒட்டிக் கொண்டு, இதை யாரும் எந்த ஊரிலும் செய்துவிட முடிகிறது.

முனிஸிபாலிட்டி, கார்ப்பொரேஷன் ஆரம்பப் பள்ளி கள் தர்ம ஆஸ்பத்திரிகளே விட மட்டமாக இருப்பதால், தனியார் முன் நின்று நடத்தும் இந்தக் கொள்ளை விலைக் கள்ள மார்க்கெட்டில் கல்வியை வாங்க எல்லாத் தரப்புப் பெற்ருேர்களும் போட்டி போட்டுக் கொண்டு க்யூவில் போய் நிற்கிருர்கள்.

ஆங்கிலம் விதேசி பாஷை-அந்நிய மொழி, என்றெல் லாம் பேசும் சூப்பர் தேச பக்தர்களும், பிரதேச மொழி அபிமானிகளும் எவ்வளவுதான் கரடியாகக் கத்தினுலும், அடி மட்டத்திலும், மத்திய தர வர்க்கத்துப் பெற்ருேர்களி .டமும் அந்த மொழியின்மேல் பற்று, மதிப்பு, ஆர்வம், ஆங்கிலம் தெரியாவிட்டால் தங்கள் குழந்தை முன்னுக்கு வர முடியாது என்ற எண்ணம்-இவற்றில் எதுவும் குறைந்து விடவில்லை. சுதந்திரமடைந்து 30 வருஷத்துக்கு மேலாகியும் இதுதான் நிலை.

பெரும்பாலான பெற்ருேர்களைப் பற்றிய இந்த ைேசகாலஜி'-இப்படிப்பட்ட பள்ளிக் கூடங்களைத் தொடங்கு கிறவர்களுக்கு மிகவும் நன்ருகத் தெரிந்திருக்கிறது. யார் என்ன சொன்னலும் ஆங்கிலம் இந்நாட்டில் மரியாதைச் சின்னமாகவே எங்கும் இன்னும் கருதப்படுகிறது.

சாதாரணமாகக் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் தொழி லாளிகள், உழைக்கும் வர்க்கத்தினர், குறைந்த வருவா யுள்ளவர்கள்கூட மற்றச் செலவுகளைக் குறைத்துக் கொண் டாவது தங்கள் குழந்தைகளே இப்படி இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளில்தான் சேர்க்கிருர்கள். வாயைக் கட்டி, வயிற் றைக் கட்டி மீதப்படுத்திய வருவாயில் பெரும் பகுதியை இப்படிப் பள்ளிகளுக்குக் கொடுத்தும்கூட இந்தப் பெற்ருேர் கள் எதிர்பார்க்கும் பலன் அங்கிருந்து கிடைப்பதில்லை. - இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் சேர்த்த ஆறு மாதத்தில் தங்கள் குழந்தை அம்மா, அப்பா என்று கூப்பிடுவதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/117&oldid=562359" இலிருந்து மீள்விக்கப்பட்டது