பக்கம்:சிந்தனை வளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 1 31

யிருந்தால் அதை வரவேற்றுச் சகித்துக் கொள்ளும் குணம் மற்றவர்களுக்கு இருக்க வேண்டும். வரவேற்கும் குணம் இருந்தால் உத்தமமான சுதந்திரம் அது சகித்துக் கொள்ளும் குணமிருந்தால் பரவாயில்லை. எங்காவது இரண்டுமில்லையாயின் அங்கு சுதந்திரமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ஒருவர் சுதந்திரமாயிருக்கப் பயன்படும் உத்திகள் பலர் ஒடுங்கிக்கிடக்க உதவுமாயின் அதுதான் சுதந்திரமின்மைக்கு அடையாள ம .

நமக்குச் சுதந்திரமாயிருக்கப் பிடிக்கிறது. கடினமாக உழைக்கப் பிடிக்கவில்லை. சொகுசாயிருக்கப் பிடிக்கிறது. பொறுப்பாயிருக்கப் பிடிக்கவில்லை. எதிர்காலத் திட்டமும், கவலையும், அக்கறையும் பிடிக்கவில்லை. இன்னும் சுதந்திரம் நமக்கு நிறையப் புரிய மீதம் வைத்திருக்கிறது. ★·

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/133&oldid=562375" இலிருந்து மீள்விக்கப்பட்டது