பக்கம்:சிந்தனை வளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் *丑姆星

யாராயிருந்தாலும் அத்துமீறுவதை அனுமதிக்கத் துணியாத அந்த ஸெண்ட்ரி'யை, ஒரு விழாக் கொண்டாடி மாலை சூட்டிப் பாராட்டலாம் போல் தோன்றுகிறது அல்லவா? ஆல்ை, பெரிய இடத்து அத்துமீறல்களும், வலிமை மிக்கவர்களின் அத்துமீறல்களும் ஆசீர்வதிக்கப்படு கிற இந்நாட்டில் கடமை உணர்வு மிக்க அந்த ஸெண்ட்ரியை வேலையை விட்டுத் துரத்தாததே பெரிய காரியம் என்று சொல்ல வேண்டும். - சாதாரணக் குடிமகன் வருமான வரியைச் செலுத்த மறந்தால் அது குற்றம். ஆனால், கால் நூற்ருண்டுக் காலத் துக்கும் மேலாக நாட்டின் அமைச்சராக இருக்கிற ஒருவர்இருந்த ஒருவர்-அதை மறந்துவிடுகிற அளவுக்கு ஆசீர் வதிக்கப்பட்டிருந்த நாடு இது. . . -

தலைவர்களும், பதவியிலுள்ளவர்களும் பதவியிலுள்ள கட்சியும் அத்துமீற அனுமதிக்கப்படுகிற நாட்டில், மக்களும் இளம் பருவத்து மாணவர்களும், முடிந்தபோதெல்லாம் அத்துமீற ஆசைப்படுவதை எப்படித் தவிர்க்க முடியும்? அல்லது தடுக்க முடியும்? - - -

கல்வி, வியாபாரம், கலை, தொழில், அரசியல் எல்லா வற்றிலும் வலிமையும் வசதியுமுள்ளவர்கள் சாங்கோ வாங்கமாக அத்துமீற அனுமதிக்கப்படுகிரு.ர்கள்.

அதே துறைகளில் வலிமையும், வசதியுமில்லாத அப்பாவி கள் பிடிபட்டு அத்துமீறலுக்காகத் தண்டிக்கப்படுகிருர்கள். அவர்களுடைய தவறுகள் அத்துமீறல்களாகப் பகிரங்க மாகப் பிரகடனம் செய்யப்படுகின்றன.

பொய், கொலை, களவு எல்லாம் செய்த ஒருவனே. அவையெல்லாம் நடந்த பிறகும் மக்கள் ஒரு தேர்தலில் வெற்றி பெறச் செய்து விடுவார்களானல், நான் தவறுகள் செய்யவில்லை. அத்துமீறவில்லை என்று இத்நாட்டு மக்களே தீர்ப்பளித்து விட்டார்கள்’ என்று அப்படித் தேர்தலில் வென்றவர் கூறிக்கொள்ள முடிகிற நாடு இது.

தவருன ஒருவருக்கு வெற்றிபெறுகிற சந்தர்ப்பம்’ கிடைத்தாலே போதும். அந்த வெற்றி விழைய அத்துமீறல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/193&oldid=562435" இலிருந்து மீள்விக்கப்பட்டது