பக்கம்:சிந்தனை வளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நா. பார்த்தசாரதி

மாக இருக்கும் தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

தாய்மொழியில் ஒருமை-பன்மைத் தவறு, நிகழ்கால இறந்த காலக் குழப்பம் போன்ற இலக்கணப் பிழைகள் செய்வதை மன்னித்து ஏற்கலாம் என்றும், ஆங்கிலத்தில் அதே பிழைகளையோ, ஸ்பெல்லிங் தவறுகளையோ கை தவறிச் செய்தால்கூட அது பஞ்சமா பாதகங்களில் ஒன்றுபோல, மன்னிக்கவும் சகித்துக் கொள்ளவும் முடியாதது போலவும் நமது ஆசிரியர்களும், அந்தஸ்துள்ள வர்ளும் உண்டாக்கி வைத்திருக்கும் பி ர ைம’ ைய என்னென்பது?

ஒரு வெள்ளைக்காரன் முதன் முதலாகத் தமிழ் கற்கும் போது செய்ய முடிந்த உச்சரிப்புப் பிழைகள், ஒருமை. பன்மை, உயர்திணை, அஃறிணை மயக்கங்களை முதன்முதலாக ஆங்கிலம் படிக்கிற இந்தியனும் செய்ய நேர்வது சகஜம், செய்யலாம், செய்வதுதான் இயற்கை என்ற சகஜ மனப் பான்மை நம்மவர்களுக்கு ஏற்படாதவரை, ஆங்கிலத்தைப் பொறுத்த மட்டும் நாம் தாழ்வு மனப்பான்மையும், அடிமைத்தனமும் உள்ளவர்கள்தான் என்பது என் முடிவு.

இப்போது தமிழ்க் கதைகள் எழுதும் எழுத்தாளர்களில்: சிலர் அவற்றை ஆங்கிலத்திலேயே எழுதித்தமிழில் டிரான்ஸ் லிட்டரேட்' செய்து நடுநடுவே சில தமிழ் வார்த்தைகளையும் துTவிவிடுகிரு.ர்கள். இது யதார்த்த நோக்கில் கதாபாத்தி: ரத்தைச் சித்தரித்துக் காட்டும் வகையில் இருக்குமானல், ஏற்கலாம்.

கதையில் வருகிறவன் குப்பனே, சுப்பனே யாரானலும் எப்படியும் ஆங்கிலத்தைத் திணித்துவிட வேண்டும் என்கிற, அரிப்புப் போக வேண்டும். இந்த அவசியமற்ற அரிப்பு: இருக்கிறவரை இவர்களும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நீங்கியவர்களில்லை என்றே கொள்ள வேண்டியிருக்கும்.

மகாத்மா காந்தியின் சுதந்திர வேட்கையை நாம் கொண்டாடுகிருேம். சுதேசி மனப்பான்மையையும் நாம் கொண்டாடுகிருேம். சுதேசி மொழிகளை மட்டும் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/44&oldid=562286" இலிருந்து மீள்விக்கப்பட்டது