பக்கம்:சிந்தனை வளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 57

எனவே ஒழிய நலியச் செய்து விடவில்லை. இதை இப்படி ஒப்

பிட்டுப் பார்ப்பதே அறிஞர்கள் வழக்கம்!

ஆனல், தமிழ்நாட்டு மனப்பான்மை தனி ரகமாக இருக்கிறது. கலப்பு உணவு, கலப்பு மணம், கலப்பு உரம் எல்லாம் வேண்டும். ஆனல், சொற்கள் மட்டும் தவிர்க்க முடியாதபடி கூட வந்து கலந்துவிடக் கூடாது. எப்படியும் அதை அபத்தமாகவாவது மொழிபெயர்த்தாக வேண்டும். ஏர்பிரேக், லாரி, பஸ், ரயில், ஆகியசொற்கள் நிரட்சர குட்சிக்குக் கூடப் புரிகிற அளவு சகஜமாக நம் மக்களுக்குத் தெரிந்தாலும், காற்றுத் தடை (ஏர் பிரேக்), சரக்குந்து (லாரி): பேருந்து (பஸ்), புகைவண்டி (ரயில்) என்றெல்லாம் அவற்றை மொழி பெயர்க்கிறவர்கள் இருக்கிருர்கள். டீஸ்வில் ஒடும் ரயில், மின்சார ரயில் எல்லாம் வந்தபின் "ரயில் என்ற பதமே டீஸல் வண்டி, மின்சார வண்டி எல்லாம் வந்த பின்பும் பெர்ருந்துகிறது. அடிப்படை அர்த்த அமைப்பு:மாருமல் இருக்கிறது.

“Women’s Consumer Co-operative Society” என்பதை, பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுக் கழகம்’ என்று அர்த்தமே குழப்பமடைகிருற்போல் மொழி பெயர்க்கிருர்கள். பெண்களுக்கான து. க ர் .ே வ | ச் கூட்டுறவு”-என்பதுபோல் மொழி பெயர்த்தால் அபத்த மான அர்த்தமாவது வராமல் இருக்கும்.

‘Minor irrigation Project' GTgåruang; "glp f5ffli பாசனத் திட்டம்’ என்று, மொழி பெயர்ப்பதை விடுத்து அதையே சிறிது மாற்றி, சிறிய நீர்ப்பாசனத் திட்டம்’ என்று அருவெறுப்பான அர்த்தம் வராமல் மொழி பெயர்க்கலாம். அர்த்தம் குழம்பாமல் கவனிப்பது மிக மிக அவசியமானது.

பாமரமக்களின் மொழி பெயர்ப்பில்கூட அபத்தம் இருக் காது. படித்தவர்களின் மொழி பெயர்ப்பில்தான் அபத்தம் அதிகம் இருக்கும், 1 ஆங்கிள் என்பதைப் பாமரத் தொழிலாளி ட’ளு ஆணி என்றும், அயர்ன் பாக்ஸை இஸ்திரிப்பெட்டி’ என்றும், ரேடியோவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/59&oldid=562301" இலிருந்து மீள்விக்கப்பட்டது