பக்கம்:சிந்தனை வளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நா. பார்த்தசாரதி

பொறுமையாக விவரங்களை விளக்கிக் கொண்டிருப்பார். அவர் ஒரு பாராட்டத்தக்க நல்ல விதிவிலக்கு, தட்டிக் கழிக்கத் தெரியாத இம்மாதிரி கர்ம வீரர்கள் சர்க்கார்,

அல்லது சர்க்கார் சம்பந்தப்பட்ட அலுவலர்களில் மிகவும்

குறைவு என்றே கூறலாம்.

ஒரு சர்க்கார் ஆஸ்பத்திரியில், பால் என்று தவருகக்

கருதி வெள்ளே நிற பியிைலை நோயாளிக்கு ஊற்றிக் கொடுத்த நர்ஸைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையில் படித்

தோம் அல்லவா? அது மாதிரித் தடுமாற்றங்கள், ஒன்றிற்கு

அப்ளை செய்ய வேண்டிய சிகிச்சையைச் சம்பந்தமில்லாத

மற்ருென்றிற்கு அ ப்ளே செய்வது, நோயாளிக்குச் சிகிச்சையோ மருந்தோ அளிக்காமல் ஆரோக்கியமான வனுக்கு அவற்றை அளித்து, அதன் மூலமே அவனே நோயாளி ஆக்குவது இவை எல்லாம் நமது ஆஸ்பத்திரிகளுக்

கும், சர்க்கார் அலுவலகங்களுக்கும் பொதுவானவை.

ஒழுங்காக வரிகட்டி முடித்து விட்டு நிம்மதியாயிருப்ப

வனுக்கு டிமாண்ட் நோட்டீஸ், அல்லது ரிக்கவரி நோட்டீஸ் வரும், அடாவடித்தனமாக, வந்தது வரட்டும் என்று வரியே கட்டாமலிருப்பவனுக்கு ரசீதும், ரீஃபண்டும் போய்ச் சேரும். இப்படிக் கூறுவது கொஞ்சம் மிகைதான் என்ருலும், நம் சர்க்கார் அலுவலகங்களின் ஆரோக்கிய மற்ற நிலைமையை விளக்க இவ்வாறு அதிசயோக்தியும். தேவைப்படுகிறது. - -

மந்திரி, ஐ. ஏ. எஸ். அதிகாரி, இதர சர்க்கார் ஊழியர் கள் அனைவரும் தாங்கள் மக்களின் சேவகர்கள் என்று அடிக்கடி பிரசங்கங்களில் கூறுகிருர்கள். ஆனால், நடைமுறை யில் மக்களைக் காக்கப் போடுவது, தட்டிக் கழிப்பது, அலேக் கழிப்பது ஆகியவற்றையே அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிருர்கள். சர்க் கார் அலுவலகங்களும், அதிகாரிகளும் சிவப்பு நாடா முறை, தந்தக்கோபுர மனப் பான்மை. இவற்றிலிருந்து விடுபட்டாலொழிய இதற்கு, விடிவு பிறக்கப் போவதில்லை. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/86&oldid=562328" இலிருந்து மீள்விக்கப்பட்டது