பக்கம்:சிந்தனை வளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 87

வழங்கும் அதன் இன்றைய நிலைமை ஒப்பிடத்தக்கது. அப்போதுதான் அதன் டெப்ரஸியேஷன் வேல்யூ” நமக்குத் தெரியும்.

உயிரும், உணர்வும் இல்லாது போனலும் உயிருள்ள தாய்ப் பசுவை ஏமாற்றிப் பால் கறக்கப் பயன்படுகிற பொய்க் கன்றுக் குட்டியைப் போல்தான், நடுநிலை என்ற வார்த்தையும் இன்று பயன்படுத்தப்படுகிறது. வைக்கோல் அடைத்த கன்றுக் குட்டி என்ருல் உங்களுக்குப் புரியலாம்.

'நிறுப்பதற்கு முந்திய நிலையில், தான் சமமாக இருந்துபின்பு தான் நிறுக்கும் பொருளையும் சமமாகச் சீர்தூக்கும் தராசு போல் அமைந்து, எக்காரணத்தைக் கொண்டும் ஒரு பக்கமாகச் சாய்ந்து விடாமல் நடுவு நிலைமை பேணுவது பெரியோர்க்குரிய குணங்களில் அழகியது’-என்பது, நடுவு நிலைமை பற்றிய திருக்குறளின் ஆதார சுருதியான விளக்கம். இந்த இலக்கணத்தின்படி பார்த்தால் நிறுப்பது முக்கியம் என்பதைவிட, நிறுப்பதற்கு முன் சமமாக இருப்பது என்பது தான் மிகமிக முக்கியம். நிறுக்கத் தொடங்குவதற்கு முன்பே ஒரு பக்கமாகத் தாழ்ந்து போய் அல்லது உயர்ந்து போய் இருக்கும் தராசு எதையும் சரியாக நிறுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிறுத்த பின்பு வரும் எடைக் குறைவுகள் - கோளாறுகளைவிட - நிறுப்பதற்கு முந்திய கோளாறுகளும் எடைக் குறைவுகளும் கவனிக்கப்பட வேண்டும். நிறுப்பதற்கு முன்பே கோளாருக இருக்கும் தராசினல் நன்ருக நிறுப்பது போல் நடிக்கத்தான் முடியுமே ஒழிய, நன்முக நிறுக்க முடியாது பாசாங்கு உண்மையாகிவிட முடியாது. -

'சமன் செய்து சீர்தூக்குவது' என்பது நிறுவைக்கு முன்னும் நேராக இருப்பது, நிறுக்கும் போதும் நேராக இருப்பது, நிறுத்த பின்னும் நேராக இருப்பது என்ற அர்த்தத்தில்தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.

மேலே கூறிய இந்த அடிப்படையான இலக்கணத்தை வைத்துக்கொண்டு இனி நம்முடைய தற்கால நடுநிலைக் கொள்கையைக் கவனிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/89&oldid=562331" இலிருந்து மீள்விக்கப்பட்டது