பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 & சிந்தாநதி வாத்தியார் படம், டிஷூ, டிஷஅ. உடம்பிலே, மனசிலே, படம் ஊறிப்போய் ஒரே குவியிலிருந்தோம். ஒரு சினிமா மெட்டை, கோரஸ்ஸா முப்பது குரலில் பாடிண்டு-நாங்கள் சைக்கிளில் இல்லை- பனிச்சறுக்கில் Ski விளையாடிக் கொண்டிருந்தோம். வழியில் ஒரு டீ கடை வந்தது. வெளியில் போட்ட பெஞ்சில் உட்கார்ந்தபடி, ஒரு சிவப்புத் தலைப்பா டீ" குடிச்சிண்டிருந்தது. எங்களைப் பார்த்து விட்டது. டபிள்ளே அப்போ சட்டப்படி குற்றம், சட்டெனத் திரும்பி மறைவதற்கோ, இறங்குவதற்கோ சந்து கூட இருந்தது. ஆனால் நாங்களா இறங்குவோம்? எங்களுள் புகுந்து கொண்டிருப்பது யார்? அந்தப் பெஞ்சை உராய்ந்தாற் போலேயே நீந்திக் கொண்டு போனோம். போற போக்கில் ஹரி, போலீசுக்காரனுக்கு 'டாட்டா !” அடிச்சான். நான்தான் சொன்னேனே. மூன்று ஹீரோக்கள் ஒரே கதாநாயகியை நந்தவனத்தில் ஒடிப்பிடிச்சு விளையாடறோம். ரெண்டுபேர் பாடினால் டூயட். மூணுபேர் பாடினால், அதுக்கு என்ன அப்பா வார்த்தை? Dream sequence இலிருந்து முரட்டுத்தனமாகச் சுய நினைவுக்குக் கொண்டு வரப்பட்டோம். “டேய் ! நில்லுங்கடா !” திருப்பிப் பார்த்தால், சைக்கிளில் துரத்திண்டு வரான். ஹரி, சும்மா, ஸ்பீடை வாரினான். போலீஸ்காரன் பின்னால் புள்ளியாகிவிட்டான். ஆனால் அது என்ன மந்திர வாதமோ, எங்களுக்கு முன்னால், பக்கவாட்டில், இரண்டு சந்துகளிலிருந்து, சைக்கிளில் இரண்டு காவல் புலிகள் எதிர்ப்பட்டு, குறுக்கே வெட்டி, எங்களை மடக்கி விட்டன. இவங்க எங்கிருந்து, எப்படி?... துரத்தியவனும் வந்து சேர்ந்தான்.