பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 177 மாசு, நான் படித்து முடிக்காத, மூடவும் முடியாத புத்தகம். ஹனுமானிடம் எனக்கு, இன்றைக்கும் ஒரு அங்க லாய்ப்பு, எங்கு ராம நாமம் கேட்டாலும் அங்கு அவர் ஆஜர். உடனே வந்து விடுவானாம். தன்னலமற்றவனாக இருந்துவிட்டுப் போகட்டும்; தன் நினைப்பு கூட- நான் ஹனுமான் எனும் பெயர் உடையவன் என்கிற நினைப் புக் கூடவா அற்றுப் போக வேண்டும்! மாசு, உங்களால் எப்படி அப்படி இருக்க முடிந்தது, நீங்கள் மாசு என்கிற அக்கறையே உங்களுக்கு இல்லாமல்? ஆனால் அதுதான் உங்கள் ரஹஸ்யமோ? உங்களுக்கே தெரியாத ரஹஸ்யம். உங்களுடைய சதா உற்சாகம், எதில் ஈடுபடினும் கொள்ளும் தன்மை, அப்படி என்னைய்யா உங்கள் தலையெழுத்து? எந்த ராமனும் இத்துணை அன்புக்கு லாயக்கா? உம்மைக் கேட்டால்! “எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை என்பீர்கள் அல்லவா? மாசு, உம்முடைய கூற்று ஒன்று மறக்கமாட்டேன். “உங்கள் எழுத்து ஒரு நிமித்தமாக நம் சந்திப்பு நிகழ்ந்தது. உங்களைச் சந்தித்த பின், உங்கள் எழுத்தை விட, நீங்கள்தான் எனக்கு முக்கியம்.” மாசு, உங்கள் தன்மையில், நீங்கள் ஏதோ சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டீர்கள். ஆனால் இன்னும் நான் அதில் அந்தந்தச் சமயத்துக்கு வியப்புகள், வெளிச் சங்கள், வர்ணங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். Kalaidoscope. உண்மையான உண்மை- நான் ஏன் இப்படிச் சொல் கிறேன், அப்படி ஒன்று உண்டா? எனக்குத் தெரியாது. உண்மையான உண்மை, நேரப் பேச்சாக, பிரசார பாஷையாக, உபதேசமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில். ஏதோ ஒரு ஜாடையில், ஒரு சைகையில், சி ந - 12