பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 183 சியாவனப்ராஷ் அஸ்வகந்தி. உடம்பு லேசில் படுக்கா தென்றுதானோ மாரடைப்பில் சாய்ந்துவிட்டான்? பெரிய குடும்பம். பெரீ- இ- இ. எண்ணிறைந்த பிள்ளை, பெண்கள், ஏராளமான பேரன் பேத்திமார். தொழில் ராஜ்யத்தின் உசிதமான ஆட்சிக்கு, ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்தார். சதுரங்கக் காய்கள். அந்தத் தொழில்களின் கணக்குகளில், வங்கிப் பணம் பல லட்சங்கள் முடங்கியிருந்தது கடனாக. மாவட்ட ஆபீசில், கடன் இலாகா நிர்வாகம் என் உத்தியோகம் ஆதலால், அவரும் நானும் அந்தக் கணக் குகள் சம்பந்தமாக வாதிக்க நேர்ந்ததுண்டு. என் கடமை வழியில் அந்தக் கணக்குகளின் நடப்பில் முரண்பாடு களை மீறில்களை எவ்வளவு நாகுக்காக அவர் முன் வைக்க முடியுமோ- அந்தச் சமயங்களுக்கு Boss வேணு மென்றே, வெளி ஜோலியாகக் கம்பி நீட்டிவிடுவார். வாங்கிக் கட்டிக் கொள்வது என் தலை மேல் விடியும். "இதோ பாரு தம்பி, பெத்த குழந்தைக்கு வவுத்திலே கட்டிவிளாதா? பல் முளைக்காதா? ஜூரம் வராதா? உங்கள் பஞ்சாங்கத்துக்கு ஒத்து வல்லேன்னு குப்பைத் தொட்டியிலே எறிஞ்சுட முடியுமோ? மில் ஆரம்ப தசை யிலிருக்கு. இப்போ அது கேக்கற ஊட்டம் தந்தால் தானே, அது தலையெடுத்துப் பலன் கொடுக்கமுடியும்? கணக்கு வேணும்னு எட்டுத் தடவை லொங்கநீங்க. கொடுத்தால், சால்ஜாப்பு சொல்லி, சமயத்தில் களுத்தை அறுக்கlங்க!” முதலாளிகள் எல்லோரையுமே பொதுவாகப் பார்த்துவிட்டேன். அவர்கள் கருத்துப்படி அவர்களுக்குக் கடிவாளமே கூடாது. ஆனால் அதுவேதானே leadership quality, எல்லோரும் என் பின்னால் வாருங்கள். A man becomes a legend in his own time.