பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 & சிந்தாநதி வீட்டைக் கண்டு பிடித்து, வந்த காரியம் முடியும்வரை பெட்டியை வைக்க ஏற்பாடு செய்து கொண்டேன். அவர் கொடுத்தது காப்பியா அது குமட்டிற்று. ஆனால் வேறு வழி? "உங்களைப் போலவாளுக்கு, பத்தாவது மைலில், ஒட்டல், வாகன வசதி எல்லாம் இருக்கே! அடுத்த ஸ்டேஷன்! வேண்டிய பேர் நேற்று வந்திருந்தார்களே!” அப்போ நான் அசடு. நான்தான். அசடுக்கு இன்னும் ருசு என்ன வேணும் ரா முழிப்புக்குச் சற்று சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு, பதவிசான உடைக்கு மாறிக் கொண்டு, நான் கிளம்பும்போது வெய்யில் வந்து விட்டது. வாசலுக் கெதிர் இரண்டு மூன்று கார்கள் நின்றன. உள்ளே பெரிய பட்டசாலை. ஜமக்காள விரிப்பின் மேல் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்து கொண்டு, மண்டைகள் கூடி, கிசுகிசு. நானும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவர்களுடன் கலந்து விட்டேன். "ஐயா வராங்க! ஐயா வராங்க!” ஒரு ஒரத்துத் திரையை விலக்கிக்கொண்டு ஐயா வெளிப்பட்டார். எழுந்து நின்றோம். அவர் கைகூப்பினார். அவர் பின்னால் ஒரு சின்னப் பரிவாரம், பிறகு தனித் தனியாக ஒவ்வொருவரும் அவரிடம் சென்று கை குலுக்கி, ஏதோ வாய் முணமுணப்பு. என் முறை வந்ததும், எங்கள் கண்களின் சந்திப்பில் லேசாக அந்தக் கருவிழியின் நடுங்கலில் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டது தெரிந்தது. உடனேயே துக்கத்தின் முகமூடி விழுந்துவிட்டது. அடுத்தவனுக்கு இடம் கொடுக்க நகர்ந்துவிட்டேன்.