பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிந்தாநதி தென்காசியில் ஒரு நண்பர் வீட்டில் மூன்று நாட்கள் டேரா ஜாலி டைம். அவர் பேச்சுவாக்கில் நாகர்கோயி லில், என் நண்பரின் தாயார் தவறி நான்கு மாதங் களாயின என்று சொன்னபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். என் பிரயாணமே நாகர்கோயிலை நோக்கி அந்த அம்மாவுடன் சந்திப்பை எதிர்நோக்கித்தான். ஆனால் அவர் மறைவு பற்றி எனக்கு ஏன் தெரிவிக்க வில்லை? எனக்கு மன வருத்தம்தான். மறுநாள். நாகர்கோயிலில் நண்பர் வீட்டை அடைந்த போது, பிற்பகல் 3 மணி இருக்கும். என்னைக் கண்டதும் எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்! அந்த உணர்ச்சி யின் பரஸ்பரத்தை விஸ்தரிக்க இயலாது. வாசல் அறையில், நண்பரும் நானும் பேசினோமோ பேசினோமோ நேரம் போய்க் கொண்டிருந்ததே தெரிய வில்லை. அவர், தரையில் பாயில் படுத்த வண்ணம். எதிரே விசுப் பலகையில், தலையணையில் சாய்ந்தபடி நான. என்ன பேசினோம்? எல்லாவற்றையும் பற்றித்தான் மேனாட்டு இலக்கியம், நம் நாட்டு இலக்கியம், புதுக் கவிதை, புது வசனம், எழுத்தின் துணுக்கங்கள், பங்சு வேஷனின் தனி பாஷை, மனிதர்கள், புவனம், வாழ்க்கை. சினிமாவைத் தவிர, இந்நாளில், தடுக்கி விழுந்தால், பேசுவதற்கும், கடிதங்களில் பரிமாறிக்கொள்ளவும் அது தானே சப்ஜெக்டே! அந்தியிறங்கி, ஒருவருக்கொருவர் முகம் மறையுமள விற்கு அறை யிருண்டுவிட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக்கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத் தான் கழற்றிக் கொண்டது. எப்போது மெளனமானோம் ? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில், எங்களைப் பூரா