பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 & சிந்தாநதி தோலுக்கடியில் ஒளிந்துகொண்டு ஒரு மாகாணி சந்தேகம்..!!!!??? {F, BUT BETWEENTHECUP AND THE LIP கையில் எடுத்த கவளம் வாய்க்குச் சேர அநிச்சயம் உயிரின் இயல்புக்கு உள்பட்டதுதானே! ஆண்டவனுக்கும் அப்பால் பட்ட "ஆனால்!" தன்னை அளவுமீறிச் சோதித்துவிட்ட கோபத்தில் திடீரெனச் சீறியெழுந்து இவர்களைக் கவிழ்த்திருக்க வேண்டும். புலியை வாலைப் பிடித்து இழுக்காதே. துரத்திக்கொண்டு வந்த பாம்பு வளைக்குள் நுழைந்த பின், வெளியே துடிக்கும் வாலைப் பிடித்து இழுக்காதே. உள்ளேயே அதன் கடிக்கும் துணிக்கு அதன் உடலை மடிக்க அதனால் முடியும். எந்த சுபாவத்தின் வாய் உள்ளேயும் தலையை நீட்டாதே. மொத்தத்தில், இவர்கள் அடைந்த முடிவை அடை வதற்கு, இவர்கள் இதுவரை பட்ட சிரமம் தேவைதானா? ஆனால், பாலயோகி விஷயத்தில் என்ன சொல்லியும் மனதைத் தோற்றிக்கொள்ள முடியவில்லை! இத்தனை பேசி அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டேனோ? நெஞ்சு குறுகுறுக்கிறது. ஆனால், சாவை த்ருணமாக மதித்த, இந்த மூவர் கால் தூசு பெறாத நான் எந்தவிதத்திலும் இவர்களை மாசு பேச நான் யார்? ஆனால் மன ஓட்டத்தைத் தடுக்க முடியவில்லையே! - ஏலி ஏலி லாமா சபக் தானி?